சனாதனம் தான் நாட்டில் பெரிய பிரச்சனையா? அதை விடுங்க முடிஞ்சு போச்சு! அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்!
சேலம்: சனாதனம் தான் நாட்டில் பெரிய பிரச்சனையா என்றும் அதை விடுங்க முடிஞ்சு போச்சு எனவும் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அட்வைஸ் அளித்துள்ளார்.
நாட்டில் பேசுவதற்கு எவ்வளவோ பிரச்சனைகள் உள்ள போது, சனாதனம்.. சனாதனம்.. என திரும்ப திரும்ப ஒன்றையே பேசிக்கொண்டிருப்பது சரியல்ல என கடுகடுத்தார். சேலம் மாவட்டம் மேட்டூரில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து ஒன்று அவரை தேசியளவில் பிரபலம் அடைய வைத்துவிட்டது. ஆந்திராவில் தலித் இளைஞர்கள் சிலர் உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு பால் அபிஷேகம் செய்யும் அளவுக்கு அவர் தேசியளவில் கவனம் ஈர்த்துள்ளார். பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள் பலரும் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிர் வினையாற்றினர்.
ஒரே வாரத்தில் இந்தியா முழுவதும் உதயநிதி பேசப்பட்டார். இந்தச் சூழலில் அவர் பேசிய கருத்து பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு கடுகடுத்த அன்புமணி, ''யப்பா, சனாதனத்தை விட்டால் பேசுவதற்கு வேறு எதுவுமே இல்லையா, நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன. காவிரியில் கர்நாடகா தண்ணீர் கொடுக்க மறுப்பு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மின் கட்டணம் உயர்வு, வேலைவாய்ப்பு இல்லாமல் தமிழ்நாட்டில் 1.5 கோடி பேர் உள்ளார்கள், இதைப்பற்றியெல்லாம் பேச வேண்டும்.''
''அதை விட்டுவிட்டு முடிஞ்சு போன ஒன்றை திரும்ப திரும்ப பேசக்கூடாது, அடுத்தது என்னவோ அதை பேசணும், சனாதனம்.. சனாதனம்..ன்னு இன்னும் அதையே கேட்காதீர்கள்'' என செய்தியாளர்களிடம் கூறினார் அன்புமணி. அதேபோல் இந்தியா என்கிற பெயரை பாரத் என்று மாற்றப்படுவதாக சொல்கிறார்களே, அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என செய்தியாளர்கள் வினவினர்.
முதலில் அது குறித்த முடிவை மத்திய அரசு எடுக்கட்டும் அதன் பிறகு கருத்து தெரிவிக்கிறேன் எனக் கூறி அந்தக் கேள்விக்கு பதிலளிப்பதிலிருந்தும் நழுவிக்கொண்டார் அன்புமணி ராமதாஸ்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications