அன்புமணி அப்படி சொன்னதும்.. சட்டென்று மாறிய ஓபிஎஸ் முகம்.. மோடி கூட்டத்தில் நடந்ததை கவனிச்சீங்களா?
சேலம்: சேலம் பாஜக கூட்டத்தில் பாமக அன்புமணி பேசுவதை முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தார் ஓ பன்னீர்செல்வம்.
சேலத்தில் நடக்கும் பாஜக கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் மேடைக்கு ஏற்றப்பட்டு உள்ளனர். பிரதமர் மோடி பங்கேற்றுள்ள கூட்டத்தில் பாஜகவின் கூட்டணி முழுமையாக மேடைக்கு ஏற்றப்பட்டு உள்ளது. பாஜகவின் முதல் பிரம்மாண்ட தேர்தல் கூட்டமாக சேலத்தில் இது நடத்தப்படுகிறது.

லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த வாரம் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.
இதையடுத்து பிரதமர் மோடி இன்று சேலத்தில் பாஜக சார்பாக பிரச்சாரம் செய்ய உள்ளார். மதியம் 12.50 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி வரும் இந்த நிகழ்வில் கூட்டணி தலைவர்கள் மேடையேற்றப்பட உள்ளனர். ஓ பன்னீர்செல்வம், பாமகவின் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் பங்கேற்று உள்ளனர் . அதேபோல் டிடிவி தினகரனும் இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளார்.
இந்த நிகழ்வில் பாமக அன்புமணி பேசுகையில், மாற்றம் வரவேண்டும் என்று மக்கள் ஏக்கத்தில் இருக்கிறார்கள்; அந்த ஏக்கத்தை தணிக்கத்தான் பாமக இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறது. நாட்டின் நலன் கருதி நாங்கள் இந்த முடிவை எடுத்து உள்ளோம். தமிழ்நாட்டின் நலன் கருதி நாங்கள் இந்த கூட்டணியை உருவாக்கி உள்ளோம்.
மக்கள் மாற்றம் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். 50 ஆண்டுகளாக இரண்டு கட்சிகள் மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறார்கள். தமிழ்நாட்டை வளர விடாமல் தடுத்து உள்ளனர். மக்கள் இதனால் மாற்றம் வர வேண்டும் என்று நினைக்கின்றனர்.
கடந்த 20 வருடமாக நான் டெல்லிக்கு சென்று வருகிறேன். டெல்லிக்கு செல்கிறேன். இப்போது மோடி வந்த பின் அங்கே அரசியல் சூழ்நிலை மாறி உள்ளது. அங்கே அரசியல் சூழல் மொத்தமாக மோடியால் மாற்றப்பட்டு உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்காக மோடி உடன் கைகோர்த்து உள்ளோம்.
ஊழலை ஒழித்தவர் பிரதமர் மோடி. அவருடன் கூட்டணி வைப்பதில் பாமக பெருமை கொள்கிறது. முழு மனதுடன் நாங்கள் இந்த கூட்டணியை வைத்து உள்ளோம்., என்று அன்புமணி கூறினார்.
இறுக்கமான முகம்: இதில் பாமக அன்புமணி " 50 ஆண்டுகளாக இரண்டு கட்சிகள் மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறார்கள். தமிழ்நாட்டை வளர விடாமல் தடுத்து உள்ளனர்" என்று அதிமுக, திமுகவை விமர்சனம் செய்து பேசினார். அப்போது ஓ பன்னீர்செல்வம் முகம் திடீரென இறுக்கம் ஆனது.
முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அன்புமணி பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தார் ஓ பன்னீர்செல்வம். ஓ பன்னீர்செல்வம் தன்னை இன்னமும் அதிமுக என்று கூறி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுகவை விமர்சனம் செய்ததை ஓ பன்னீர்செல்வம் இறுக்கமாக பார்த்தபடி இருந்தார்.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications