ஆத்தூர் விபத்து..பின்னோக்கி வந்த டிப்பர் லாரி- ஆம்னி பேருந்து மீது பயங்கரமாக மோதல்.. 6 பேர் பலி
சேலம்: சேலம் அருகே ஆம்னி பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உள்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சென்னையில் நடைபெறும் உறவினர் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவுக்கு குடும்பத்துடன் செல்ல ஆம்னி பஸ்ஸில் டிக்கெட் எடுத்திருந்தனர்.

அந்த பேருந்து சேலத்தில் இருந்து நேற்ரு இரவு 11.30 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது. அந்த பேருந்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நள்ளிரவு 12.45 மணி அளவில் அந்த பேருந்தில் பெத்தநாயக்கன்பாளையம் வந்தது.
அப்போது சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற டிப்பர் லாரி பின்னோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த சமயம் ஆம்னி பேருந்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்தின் மீது டிப்பர் லாரி வேகமாக மோதியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
மேலும் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடம் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகிவிட்டனர்.
விபத்தில் இறந்தோரின் விவரங்கள்: திருநாவுக்கரசு, தீபன், விஜயா ரவிக்குமார், செந்தில் வளவன், சுப்பிரமணி ஆகிய 6 பேர் பலியாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications