40 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள்.. மிரட்டி மிரட்டியே சீரழித்த ஆட்டோ டிரைவர்.. சேலத்தில் பெரும் பரபரப்பு

பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர் கைதானார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    40 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள்.. மிரட்டி மிரட்டியே சீரழித்த ஆட்டோ டிரைவர்..வீடியோ

    சேலம்: 40க்கும் மேற்பட்ட பெண்களிடம், கொடூரமான வக்கிரத்துடன் மிரட்டி மிரட்டியே பாலியல் அக்கிரமத்தில் ஈடுபட்டதுடன், ஆபாச வீடியோக்களையும் எடுத்து மிரட்டிய ஆட்டோக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் வசித்து வருபவர் மோகன்ராஜ். இவர்தான் அந்த ஆட்டோ டிரைவர். ஒரு கட்சியில் இவர் ஆட்டோ தொழிற்சங்க தலைவராகவும் இருக்கிறாராம்.

    ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தார். ஆனால் இந்த மோகன்ராஜ் தந்த பாலியல் வக்கிரம் தாங்காமல் ஓடியே போய்விட்டார். அடுத்ததாக 2-வது கல்யாணம் செய்தார் மோகன்ராஜ். அந்த பெண்ணும் இவர் செய்த பாலியல் தொல்லை தாங்காமல் பிரிந்து சென்றுவிட்டார்.

    மிரட்டல்

    மிரட்டல்

    அதற்கு பிறகு மோகன்ராஜ் கல்யாணம் செய்யவில்லை. பதிலாக, பெண்களை மிரட்டி பாலியல் வக்கிரங்களை அரங்கேற்ற தொடங்கினார். காகாபாளையம் பஸ் ஸ்டாப் பக்கம்தான் இவருக்கு ஆட்டோ ஸ்டேண்ட்! அங்கு வந்த ஒரு பெண்ணை ஆட்டோவில் ஏற்றி சென்று, மிரட்டி, பலாத்காரம் செய்துள்ளார். அதை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மோகன்ராஜ் மிரட்டவும், அந்த பெண், மாவட்ட எஸ்பி ஆபீசில் 3 நாளைக்கு முன்பு புகார் தந்தார்.

    7 பெண்கள்

    7 பெண்கள்

    வழக்கமான கேஸ் என்றுதான் போலீஸார் இதில் இறங்கினார். ஆனால், மோகன்ராஜ் பற்றி தகவல்கள் ஒவ்வொன்றும் பகீர் பகீர் என வெளியே வந்தது. இவர் அரசியல் பின்புலத்துடன் இருப்பது முதலில் தெரியவந்தது. அடுத்ததாக அவரது செல்போனை பறிமுதல் செய்து பார்த்தால், 7 பெண்களை மிரட்டி, அடித்து, வக்கிரமான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

    காம லிஸ்ட்

    காம லிஸ்ட்

    அதில் ஒரு பெண் கல்லூரி மாணவி.. இன்னொரு பெண்ணை இப்போது காணவில்லையாம்.. இவர்கள் வெறும் 7 பெண்கள்தான் என்று பார்த்தால், நீண்டுகொண்டே போகிறது காம லிஸ்ட்! காகாபாளையம் பகுதிக்கு செல்ல கோவை, ஈரோடு, பவானி, சேலத்துக்கு செல்ல ராத்திரிகளில் பஸ் வசதி இல்லையாம். அதனால், வெளியூர் சென்றுவிட்டு இரவில் ஊர் திரும்புபவர்கள் காகாபாளையம் பஸ் ஸ்டேண்டில் இருந்துதான் ஆட்டோவில் செல்வார்களாம்.

    உல்லாசம்

    உல்லாசம்

    அப்படிதான் மோகன்ராஜ் ஆட்டோவில் ஏறும் பெண்களிடம் வேலையை காட்டி உள்ளார். இனிக்க இனிக்க நல்லவன் போல பேசி.. அந்த பெண்களின் போன் நம்பரை வாங்கி வைத்து கொண்டு.. பிறகுதான் வீட்டுக்கு நண்பர் போல வரவழைப்பார். அங்கு மிரட்டி அவர்களுடன் உறவு கொள்வார். இதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, கூப்பிடும் நேரத்திற்கெல்லாம் வீட்டுக்கு வரவில்லையானால், சோஷியல் மீடியாவில் போடுவதாகவும் மிரட்டியே பணிய வைத்துள்ளார்.

    வீடியோ

    வீடியோ

    இப்படியே 40-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். சில சமயம் பெண்களை நண்பர்களுக்கு விருந்தாக்கவும் செய்துள்ளார் இந்த மோகன்ராஜ். இப்படி மோகன்ராஜ் பலவந்தப்படுத்தி பெண்களை சீரழிக்கும்போது, அதை அவரது நண்பர் வீடியோ எடுப்பாராம். அவரை இப்போது காணவில்லை. அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இப்போதைக்கு இந்த காம கொடூரன் மோகன்ராஜ், கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இனிமேல் நடக்க போகும் விசாரணையில்தான் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+