ஆபாச பட குவியல்.. அதிர வைக்கும் ஆட்டோ மோகன்ராஜின் செல்போன்.. 10 பெண்களை சீரழித்தது அம்பலம்
சேலம் ஆட்டோ மோகன்ராஜ் வாக்குமூலம் தந்துள்ளார்
சேலம்: ஹோமோசெக்ஸ் புகாரில் கைதாகி சிறையில் உள்ள ஆட்டோக்கார மோகன்ராஜின் செல்போனில், ஏகப்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதை கண்டு சேலம் போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி உல்லாசமாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டம் காக்காபாளையம் பகுதி ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் குறித்த செய்திகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காக்காபாளையம் பஸ் அருகே உள்ள ஒரு பொது கழிப்பறைக்குள் வந்த முருகேசன் என்பவரை ஓரினச் சேர்க்கைக்கு மோகன்ராஜ் அழைத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தபிறகுதான், பல விவகாரங்கள் வெளியே வந்தன.

அவரிடம் இருந்த செல்போனில், மோகன்ராஜ் பெண் ஒருவரை மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பதும், அந்த வீடியோவை, மோகன்ராஜே, சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் என்றும் சொல்லப்பட்டது. இதைதவிர, மோகன்ராஜ் 7 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவை அந்த செல்போனிலேயே மோகன்ராஜ் பதிவுசெய்து வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, மோகன்ராஜை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது. அதன்படி தற்போது விசாரணையும் தீவிரமாக நடந்தது. எத்தனை பெண்களை நாசம் செய்தார், ஆபாச வீடியோக்கள் எத்தனை என்பது குறித்தெல்லாம் விசாரணை நடந்தது.
இன்னொரு பக்கம் மோகன்ராஜின் செல்போனும் ஆய்வு செய்யப்பட்டது. அதில் மேலும் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் குறித்து மோகன்ராஜிடம் கேட்கப்பட்டதற்கு, அவர்களை மிரட்டி பணிய வைத்து சீரழித்ததை ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
ஏழை பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வேலைக்கு போகும் பெண்களை தான் மோகன்ராஜ் குறி வைத்து.. மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். அவரது செல்போனில் இன்னொரு பெண்ணை மிரட்டி, பலாத்காரம் செய்துள்ளார். அதையும் வீடியோ எடுத்து வைத்துள்ளார். அந்த வீடியோவை நெருங்கிய நண்பர் மணிகண்டனிடம் மோகன் ராஜ் காட்டியுள்ளார்.
உடனே, மணிகண்டன் அந்த வீடியே தன் செல்போனில் பதிவுசெய்து வைத்து கொண்டு, அந்த பெண்ணை மிரட்டி நாசம் செய்துள்ளார். இப்படியே மாறி மாறி நாசம் செய்துள்ளது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் என்பது விசாரணையில் இதுவரை தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட அந்த பெண்களிடம் போலீசாரும் விசாரணை நடத்தியதில், மோகன்ராஜ் தங்களை சீரழித்தது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்களாம். இப்போதைக்கு 7 நாள் போலீஸ் விசாரணையில் போதுமான தகவல்கள், ஆதாரங்கள் திரட்டப்பட்டு, மீண்டும் மோகன்ராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications