பத்திரிக்கை அடித்து, வளையல் அணிவித்து.. நாய்க்கு நடந்த வளைகாப்பு! - அசத்திய சேலத்து குடும்பம்!
சேலம்: பத்திரிக்கை அடித்து உறவினர்களை அழைத்து தங்களது செல்லப் பிராணியான நாய்க்கு வளைகாப்பு நடத்தி இருக்கிறார் சேலத்தை சேர்ந்த புகைப்பட கலைஞர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் புகைப்பட கலைஞரான இவர் தனது வீட்டில் சாரா என்ற பொமேரியன் வகையைச் சேர்ந்த நாயை வளர்த்து வருகிறார். அதே வகையை சார்ந்த ஹைடி என்ற ஆண் இனத்தை சேர்ந்த நாயையும் வளர்த்து வருகின்றார்.
குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே வளர்த்து வந்த செல்லப்பிராணி சாரா கருத்தரித்தது அறிந்ததும் இதுகுறித்து சென்னையில் உள்ள தனது மகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவரது மகள் செல்லப் பிராணிக்கு வளைகாப்பு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கை
வளைகாப்பு நடத்த திட்டமிட்டதால், தனியாக பத்திரிக்கை அடித்து அதனை உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்து கடந்த 13ஆம் தேதி வளைகாப்பு நடத்தினர். இதற்காக சென்னையில் படித்து வந்த அவரது மகளும் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.

வளைகாப்பு
கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்துவது போன்று இரண்டு நாய்களையும் தனித்தனி இருக்கையில் அமரவைத்து, கர்ப்பம் தரித்த சாரா என்ற செல்லப் பிராணிக்கு மஞ்சள் குங்குமம் சந்தனம் வைத்து நலுங்கு வைத்த பெண்கள் சாராவுக்கு வளையல் மாட்டி அழகு பார்த்தனர்.

நலுங்கு
உறவினர்கள் மட்டுமில்லாமல் அக்கம் பக்கத்தில் இருந்து வந்தவர்களும் சாராவிற்கு நலுங்கு வைத்து வாழ்த்து தெரிவித்தனர் தொடர்ந்து ஆரத்தி எடுத்து வளைகாப்பு நிகழ்ச்சியை முடித்து வைத்த குடும்பத்தினர் வளைகாப்புக்கு வந்தவர்களுக்கு ஐந்து வகையான உணவுகளையும் பரிமாறி அசத்தினர்.

நாகரிகம்
நாகரிகம் வளர்ந்து வரும் இந்த சூழலில் குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்த தயங்கி வரும் சூழலில் தனது செல்லப்பிராணிகளுக்கு வளைகாப்பு நடத்திய புகைப்பட கலைஞருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications