சென்னை தனி யூனியன் பிரதேசம்; தமிழகத்தின் பெயர் தட்சிண பிரதேஷ் என மாற்ற பாஜக சதி: திருமாவளவன் பகீர்
சேலம்: சென்னையை தனி யூனியன் பிரதேசமாக்கவும் தமிழ்நாட்டின் பெயரை தட்சிண பிரதேஷ் என மாற்றவும் பாரதிய ஜனதா கட்சி சதி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
சேலத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் பேசியதாவது:

காலூன்ற நினைக்கும் பாஜக
தமிழகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழ்த் தேசத்தின் பாரம்பரியத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டு மக்களையும் ஜனநாயகத்தையும் சமூக நீதியையும் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்போடு உருவாக்கப்பட்டிருக்கிறது திமுக கூட்டணி. கருணாநிதி, ஜெயலலிதா இல்லை என்ற காரணத்தால் தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிவிடலாம் என நினைக்கிறது பாரதிய ஜனதா கட்சி. தமிழகத்தில் காலூன்றுவதுதான் பாரதிய ஜனதா கட்சியின் முதன்மையான நோக்கம். இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜகவின் அரசியல் வெற்றி பெற்றது. பாஜகவின் யுக்தி வெற்றி பெற்றது. மதவெறியை தூண்டி மக்களை பிளவுபடுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டார்கள். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாமல் தமிழ்நாட்டில் மட்டும்தான் பாஜக தோற்றுப் போய் நிற்கிறது.

பலிக்காத பாஜக ஜம்பம்
எத்தனையோ பல பகீரத முயற்சிகளை எல்லாம் மேற்கொண்டு பார்த்தார்கள். ஆனாலும் அவர்களின் ஜம்பம் பலிக்கவில்லை. அவர்கள் முயற்சி வெற்றி பெறவில்லை. மக்கள் செல்வாக்கு கொண்ட கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காரணத்தால் பாஜகவால் தமிழ்நாட்டுக்குள் அடி எடுத்து வைக்க முடியவில்லை. இது கடந்த கால வரலாறு.

யுத்த பிரகடனம்
இப்போது பாஜக குறைத்து மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறது. கருணாநிதியைவிட பன்மடங்கு நவீன தகவல் தொழில்நுட்பங்களுடன் திமுகவை ஸ்டாலின் வலிமைப்படுத்தி இருக்கிறார். அதிமுக, பாமகவின் முதுகில் சவாரி செய்து தமிழகம், புதுச்சேரிக்குள் வலிமை பெற்றுவிடலாம் என கணக்குப் போட்டு வருகிறது. அதிமுக என்பது நீர்த்துப் போய்விட்ட கட்சி. பாட்டாளி மக்கள் கட்சி விலை போய்விட்டது. பாஜகவுக்கும் திமுக தலைமையிலான கூட்டணிக்கும்தான் இந்த தேர்தலில் நேரடி யுத்தம். அதனால்தான் இதனை ஒரு கருத்தியல் போர் என்று பிரகடனம் செய்கிறோம்.

தமிழ்நாடு பெயர் மாற்ற திட்டம்
தமிழ்நாட்டுக்குள் சாதி உணர்வை தூண்டி, மதவெறியைப் பரப்பி இஸ்லாமியர்களுக்கும் கிறித்துவர்களுக்குமான வெறுப்பு அரசியலை விதைத்து இத்தனை ஆண்டு காலமாக கட்டிகாத்த சமூக நீதியை குறிவைத்து தகர்க்கப் பார்க்கிறார்கள் இந்த சனாதான சக்திகள். தமிழ் மொழி, தமிழ் இனம், சமூக நீதி, ஜனநாயகத்துக்கு என அனைத்துக்குமான ஆபத்து நம்மை சூழ்ந்துள்ளது. தமிழ்நாடு என்ற பெயரையே மாற்றிவிட்டு தட்சிண பிரதேஷ் என பெயர்சூட்டுவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாடு என்ற பெயர் சூட்டுவதற்கு பேரறிஞர் அண்ணா எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன? தமிழ்நாடு பெயர் சூட்ட கோரி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர்த்தியாகம் செய்த வரலாறு என்ன? இப்படி மொழி வரலாறு, இன வரலாறு நமக்கு இருக்கிறது. இவற்றை குழிதோண்டி புதைக்கிற முயற்சியில் பாஜக இறங்கி உள்ளது.

தனி யூனியன் பிரதேசமாக சென்னை?
சென்னையை யூனியன் பிரதேசமாக்கி தங்களது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். ஆகையால் பாஜக, ஒன்றிரண்டு இடங்களில் வெற்றி பெற்றால் கூட நாட்டுக்கு ஆபத்து. அதிமுக, பாமக வெற்றி பெற்றாலும் கூட அது பாஜகவின் வெற்றியாகத்தான் பார்க்க வேண்டும். இவ்வாறு தொல். திருமாவளவன் கூறினார்.
-
விஜயை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரும் வரை அவகாசம்! மெகா பிளான்! சந்தேகம் தரும் தமிழக தேர்தல் அட்டவணை -
டெல்லியில் அதானி அனுப்பிய அட்வைஸ் தூது.. கவனமாய் கேட்டுக்கொண்ட விஜய்.. இனிதான் பெரிய ட்விஸ்டே -
தேர்தல் விதி வருவதற்கு.. 20 நிமிடம் முன் சென்னையில் மாஸ் "சம்பவம்".. இது லிஸ்டுலேயே இல்லையே -
வேல்முருகன் 72 மணி நேர கெடு யாருக்கு லாபம்? தவெக பிளான் B.. திமுகவுக்கு வாழ்வுரிமை கட்சியால் லாஸ்? -
விட மாட்டேங்குறாங்க.. உள்ளே இருந்துகிட்டு கலகம்! கூட்டணி பேச்சில் இழுபறி.. திமுகவுக்கு பெரிய தலைவலி! -
ஒத்த சீட்டு வைகோ..கடுகடு கம்யூனிஸ்ட்கள்! விரக்தியில் விசிக திருமா! ஸ்டாலினுக்கு புது தலைவலி ஸ்டார்ட் -
விசித்திரமா இருக்கே.. தமிழ்நாட்டிற்கு தாமதமாக தேர்தல் ஏன்? தேர்தல் ஆணையம் வைத்த பெரிய ‘ட்விஸ்ட்’ -
வேகம் எடுக்கும் திமுக.. வேட்பாளர்கள் யார் யார்.. 17 ஆம் தேதி நேர்காணலை தொடங்குகிறார் ஸ்டாலின் -
எனக்கு ஒன்னு.. என் மகனுக்கு ஒன்னு.. வாரிசுகளுக்கு சீட் கேட்கும் திமுக அமைச்சர்கள்.. லிஸ்ட் பெருசா போகுதே -
2,000 ரூபாய் 'மெகா' பிளான்.. தகரும் தடை? கோட்டையை நோக்கி திமுகவின் மகளிர் உரிமை தொகை அஸ்திரம்! -
1971 இல் மிருக பலம் பெற்ற திமுக! சுருண்டு விழுந்த காமராஜர்? இந்திராவுக்கு தண்ணி காட்டிய கருணாநிதி! -
மார்ச் 18க்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. காக்க வைக்கப்படும் திருமாவளவன்.. பின்னணி என்ன?











Click it and Unblock the Notifications