திருக்குறளை சொன்னால்.. கோவிலை கட்டினால்.. ஓட்டு விழும்னு நினைக்கிறாங்க! பாஜகவை விளாசிய ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சேலம்: திருக்குறளை சொன்னால் போதும்.. பொங்கலை கொண்டாடினால் போதும்.. அயோத்தியில் கோவிலை கட்டினால் போதும்.. தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு போடுவாங்கன்னு ஏமாற்ற நினைக்கிறாங்க என்று சேலம் மாநாட்டில் பாஜகவை விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- இன்றைக்கு பிரதமராக இருக்கூடிய மோடி, முன்பு குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்தவர் தான். ஆனால் இப்போது மாநிலங்களை மொத்தமாக ஒழித்துக்கட்டுவதற்கான முயற்சியை தான் அவர் வந்ததில் இருந்து செய்துகொண்டு இருக்கிறார். மிகப்பெரிய இயற்கை பேரிடர் காலத்தில் கூட நமக்காக உதவி செய்தது இல்லை.. பேசினார்களே.. சமீபத்தில் வந்த பேரிடருக்கு 37 ஆயிரம் கோடி கேட்டிருக்கிறோம். ஆனா இதுவரைக்கு 10 பைசா தரவில்லை.

 BJP think if they build a temple Will Get Voted Chief Minister M K Stalin slams BJP

இது பெரியார் மண்: பிரதமர் மோடி வந்தார் தருவேன் என்று சொன்னார்.. நிதி அமைச்சர் வந்தார்.. தருவேன் என்று சொன்னார்.. பாதுகாப்பு துறை அமைச்சர் வந்தார்.. தருவேன் என்று சொன்னார்.. உள்துறை அமைச்சரை அமைச்சர் பாலு தலைமையில் அமைச்சர்கள் சந்தித்து பேசினார்கள் அப்போதும் தருவேன் என்று சொன்னார் ஆனால் இன்னும் வரவில்லை.

இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் திருக்குறளை சொன்னால் போதும்.. பொங்கலை கொண்டாடினால் போதும்.. அயோத்தியில் கோவிலை கட்டினால் போதும்.. தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு போடுவாங்கன்னு ஏமாற்ற நினைக்கிறாங்க.. அவங்க இன்னும் நம்மளை புரிந்துகொள்ளவில்லை. இது பெரியார் மண்.. பேரறிஞர் அண்ணா மண்.. கலைஞர் கருணாநிதி மண்..

ஆளுநர்களே போதும்: பிரதமர் மோடி பிரதமராக ஆகியிருக்கிறார். அவருக்கு 2 முறையும் தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்கவில்லை. இந்த முறையும் நிச்சயமாக வாக்களிக்கப்போவது இல்லை.. இந்த முறை தமிழ்நாட்டை போலவே இந்தியாவும் செயல்பட போகிறது. ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கிறதால் அவர்கள் என்ன செய்கிறார்கள்.. கட்சியை உடைக்கிறாங்க.. எம்எல்ஏக்களை இழுக்கிறது.. ஆளுநர் மூலமாக குறுக்கு வழியில் ஆட்சி நடத்தப் பார்ப்பது..

சொல்லப்போனால் பாஜகவுக்கு வேட்டு வைக்க வேறு யாரும் தேவையில்லை.. ஆளுநர்களே போதும்.. சிறப்பா செஞ்சு முடிச்சுடுவாங்க.. நாம உருவாக்கியிருக்கின்ற இந்தியா கூட்டணி தலைமையில் அமையும் ஆட்சி ஒற்றை தலைமை ஆட்சியாக இருக்காது.. சர்வாதிகார ஆட்சியாக இருக்காது.. கூட்டாட்சியாக இருக்கும். மாநிலங்களை மதிக்கிற ஆட்சியாக இருக்கும். தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இருக்கும்.

40 ம் நமதே: இந்தியாவை அனைத்து வகையிலும் முன்னேற்றக்கூடிய வகையில் ஆட்சியாக இருக்கும். அதற்கான பணி நம்மை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது. தேர்தல் பணி தொடக்கமாக சேலம் மாநாட்டுக்கு முன்பாகவே 3 குழுக்களை அமைத்துவிட்டோம்.. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டிஆர் பாலு தலைமையில் ஒரு குழுவும், தேர்தல் அறிக்கையை தயாரிக்க தங்கை கனிமொழி தலைமையில் ஒரு குழுவும்,

தேர்தல் பணிகளை முழுமையாக கண்காணித்து ஒருங்கிணைக்க எவ வேலு, கே என் நேரு, பாரதி, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் என 5 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. யார் வேட்பாளர் என்று நீங்க மனதை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம். யார் வெற்றி பெறப்போகிறார்களோ.. அவர்கள் தான் வேட்பாளர்கள்.. இது உறுதி.. 40 ம் நமதே நாடும் நமதே என நாளை முதல் புறப்படுங்கள்.. வரும் 3 மாதங்கள் உழைக்கும் உழைப்பு தான் இந்தியாவின் அடுத்த 5 ஆண்டு எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

ஒவ்வொருவரையும் என் மகனாக: நம் அனைவரது ஒற்றை நோக்கமும் "இந்தியா கூட்டணி"யை வெல்ல வைப்பது.. இந்தியாவை வெல்வது.. என் உயிரினும் மேலான இளைஞரணி தம்பிமார்களே.. உதயநிதி மட்டுமல்ல.. நீங்க அனைவருமே என்னுடைய மகன் தான்.. உங்கள் ஒவ்வொருவரையும் என் மகனாக கழகத்தின் கொள்கை வாரிசுகளாக தான் பார்க்கிறேன். உங்களால் தான் இன்று லட்சம் பேரின் சக்தியை பெற்றுவிட்டேன். நாடும் நமதே.. நாற்பதும் நமதே.. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+