ஓடும் பேருந்தில் தகராறு... குடிபோதையில் தவறி விழுந்த வாலிபர் பலி, மற்றொருவர் காயம்
சேலம்: சேலம் அருகே ஓடும் பேருந்தில் மது போதையில் வாலிபர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில், பேருந்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலியானார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரிலுள்ள உடையார்பாளையத்தை சேர்ந்த ஜவகரின் மகன் சிராஜிதின் (24), கட்டுமான தொழிலாளியான சிராஜிதின், தனது நண்பர் கோபால் (24) என்பவருடன் சேர்ந்து மது அருந்தி விட்டு, நேற்று அதிகாலை சுமார் 6.00 மணியளவில் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் என்ற இடத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
மது போதையில் இருந்த இருவரும் தகராறு செய்தபடியே அங்கு நின்றிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது அங்கிருந்த வேகத்தடை அருகே மெதுவாக சென்ற பேருந்தில் இருவரும் ஓடிச் சென்று ஏறியுள்ளனர்.
சேலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அப்பேருந்தில் ஏறிய பின்னரும், இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் நிலைதடுமாறி கோபால் பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்தார். அவரை பின்பக்க படிக்கட்டில் நின்று கொண்டு சிராஜிதின் எட்டிப்பார்த்துள்ளார். அப்போது, அவருடன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
பயணிகளின் அலறல் சத்தத்தைக் கேட்டு பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு சிராஜிதினை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். தலையில் படுகாயமடைந்த கோபாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பலியான சிராஜிதின் "பேன்ட் பாக்கெட்"டில் இருந்து மதுபாட்டிலையும், கஞ்சா பொட்டலத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications