நீட் ஆள்மாறாட்டம்.. மொரீஷியஸ் தப்பியதாக கூறப்பட்ட இர்பான்.. சேலத்தில் கைது செய்தது சிபிசிஐடி
Recommended Video
சேலம்: மொரீஷியஸ் தப்பியதாக கூறப்பட்ட மாணவர் இர்பானை சேலத்தில் வைத்து சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த உதித் சூர்யா என்ற மாணவனும் அவரது தந்தை வெங்கடேசனும் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வெங்கடேசனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் திருவனந்தபுரத்தில் நீட் பயிற்சி மையத்தின் புரோக்கர் ஜார்ஜ் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

விசாரணை
அந்த தகவல்களின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல் அவரது தந்தை டேவிட், அபிராமி, தருமபுரி அரசு கல்லூரியில் படித்து வந்த இர்பான், அவரது தந்தை முகமது சஃபி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தந்தை
இதில் பிரவீன், ராகுல் ஆகியோர் முறைகேடு செய்தது தெரியவந்ததை அடுத்து அவர்கள் இருவரையும் அவர்களது இரு தந்தையையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அபிராமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

போலீஸார்
இந்த நிலையில் இர்பான் கடந்த 6-ஆம் தேதியே மொரீஷியஸுக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. அவரது தந்தையும் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாக கூறப்பட்ட நிலையில் அவரை நேற்று வாணியம்பாடியில் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

ரகசிய தகவல்
இத்தனை ஆள்மாறாட்ட விவகாரத்துக்கும் அவர் மூளையாக இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மொரீஷியஸ் சென்றதாக கூறப்பட்ட இர்பான் சேலத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

சேலத்தில் கைது
அதன்பேரில் அங்கு சென்ற சிபிசிஐடி போலீஸார் தீவட்டிபட்டியில் உள்ள டேனிஷ்பேட்டையில் பதுங்கியிருந்த இர்பான் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தேனிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினால் இன்னும் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications