ஆஹா..பயனாளிகள் லிஸ்ட்டே இவ்வளவு பெருசா? சேலத்தில் 50,202 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஸ்டாலின்
சேலம் : சேலம் மாவட்டத்தில் கருப்பூரில் முடிவுற்ற பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.653 கோடி மதிப்பீட்டில் இளம்பிள்ளை கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து சுமார் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
சேலம் மாநகராட்சி அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு 1,713 சதுரடி பரப்பில் 4 அடி உயரத்தில் பீடமும், 16 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த 16 அடி உயர முழுஉருவ வெண்கல சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, சேலத்தில் 96 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரண்டு அடுக்குகளில் பேருந்து நின்று செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து சேலம், கருப்பூர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 390 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின். 331 புதிய பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.653 கோடி மதிப்பீட்டில் இளம்பிள்ளை கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், ரூ. 170.31 கோடி மதிப்பில் 50 ஆயிரத்து 202 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி. கருணாநிதியை முழு வசனகர்த்தாவாக மாற்றிய ஊர் சேலம். கருணாநிதி நூற்றாண்டின் முதல் சிலையை சேலத்தில் நிறுவியது பொருத்தமான ஒன்று. சேலம் மாவட்டத்திற்கு கணக்கிலடங்காத திட்டங்களை திமுக அரசு செய்துள்ளது. சேலம் மாவட்டத்திற்கு இன்னும் அதிக திட்டங்கள் வர உள்ளன. சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்ற அப்படையில் செயல்பட்டு வருகிறோம்." எனத் தெரிவித்தார்.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications