எடப்பாடி பழனிசாமி மாமனார் காலமானார்... தீபாவளியன்று நிகழ்ந்த துயரம்
Recommended Video
சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் கவுண்டர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77.
சங்ககிரி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டார்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனை வரும் வழியிலேயே காளியண்ணன் உயிரிழந்துள்ளவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

காலமானார்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவின் தந்தை காளியண்ணன் கவுண்டர் சங்ககிரி அருகே உள்ள தேவூர் அம்மாபாளையத்தில் வசித்து வந்தார். சேலத்திற்கோ, சென்னைக்கோ பிள்ளைகள் வீட்டிற்கு செல்லாமல் கிராமத்தில் விவசாயத்தை கவனித்துக்கொண்டு வாழ்ந்து வந்தவர் அவர்.

எளிமையானவர்
காளியண்ணன் கவுண்டருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தமகள் பெயர் ராதா. இவர் தான் எடப்பாடி பழனிசாமியின் மனைவி. இரண்டாவது மகள் பெயர் சுசிலா, மூன்றாவது பிள்ளை வெங்கடேசன். மருமகன் முதலமைச்சராக இருந்தாலும் கூட அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எளிமையான முறையில் அனைவரிடத்திலும் அன்புடன் பழகக் கூடியவர்.

காலமானார்
தீபாவளியன்று தேவூர் அம்மாபாளையத்தில் உள்ள இல்லத்தில் இருந்த காளியண்ணன் கவுண்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் அருகிலுள்ள ஊரான குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே காளியண்ணன் கவுண்டர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அரசு மருத்துவமனை
காளியண்ணன் கவுண்டருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் தீபாவளி என்பதால் அன்று விடுமுறையில் இருந்துள்ளார். இதையடுத்து தாமதிக்க வேண்டாம் எனக் கருதி அவரின் உறவினர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனை அழைத்துச்சென்றுள்ளனர்.

தெரிந்த பெயர்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனாரை குஞ்சுபையக் கவுண்டர் என்று அழைத்தால் தான் சங்ககிரி பகுதியில் அனைவருக்கும் தெரிகிறது. ஏனென்றால் அந்தப் பெயரில் தான் அழைக்கப்பட்டு வந்தார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications