மச்சான் தயவு இருந்தா மலையேறியும் பிழைக்கலாம்... களமிறங்கினார் முதல்வரின் மைத்துனர்
சேலம்: மச்சான் தயவு இருந்தா மலையேறியும் பிழைக்கலாம் என்பது கிராமத்து பழமொழி. அதை தேர்தலுக்காக நடைமுறைப் படுத்தியுள்ளார் நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
நடைபெறவுள்ள மக்களவை தேர்தலும் 18 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைதேர்தலும் திமுக அதிமுக ஆகிய இருகட்சிகளுக்கும் வாழ்வா சாவா போராட்டம். மக்களவை தேர்தலில் மொத்தமாக விட்டாலும் இடைதேர்தலில் குறைந்தது 6 இடங்களையாவது கைப்பற்றினால் மட்டுமே அதிமுக ஆட்சி நீடிக்க முடியும் என்ற நிலை உள்ளது.

இதனால் அதிமுகவினர் இந்த தேர்தலில் ஊன் உறக்கம் இன்றி உழைத்து வருகின்றனர். திமுகவை பொறுத்தமட்டில் திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இது ஸ்டாலினின் ஆளுமைக்கு வைக்கப்படும் ஆசிட் டெஸ்ட். அதனால் திமுகவும் இந்த தேர்தலில் தீயாய் வேலை செய்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தேர்தலில் வென்றால் மட்டுமே தனக்கு திடீரென்று கிடைத்த முதல்வர் பதவியை தக்க வைக்க முடியும். அதோடு சேலம் மக்களவைத் தொகுதியை பொருத்தமட்டில் அவருக்கு மிகபெரிய இமேஜ் பிரச்சனை. அந்த தொகுதியில் திமுக வென்றால் முதல்வரின் தொகுதியிலேயே வெல்ல முடியவில்லை என்று எடப்பாடியின் பெயர் டேமேஜ் ஆவதோடு அவரது தலைமைப் பொறுப்புக்கே கேள்வி வந்து சேரும். அதனால் அந்த தொகுதியில் என்ன விலை கொடுத்தேனும் வென்றே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்துவருகிறார் முதல்வர்.
இதனால் சேலம் மக்களவை தொகுதி மற்றும் 18 இடைதேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ள அதிமுகவினர், அதிமுக அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க திண்ணை பிரச்சார யுக்தியை கையில் எடுத்துள்ளனர். குறிப்பாக அதிமுக எந்த பகுதிகளில் பலவீனமாக உள்ளதோ அந்தப் பகுதிகளில் முதலமைச்சர் எடப்படியின் மச்சான் வெங்கடேஷ் காளியண்ணன் லோக்கல் அதிமுகவினரோடு இணைந்து தீவிர திண்ணைப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
நேற்று நாமக்கல் மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக திண்ணைப் பிரச்சாரம் செய்து வரும் அவர் லோக்கல் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் ஆகியோரை அழைத்துக் கொண்டு நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீடு வீடாக சென்று அரசின் நலத் திட்டங்களை எடுத்துக் கூறுகிறார். முதல்வர் பழனிசாமியும் தான் சேலத்தை விட்டு வெளியூர் செல்லும் நேரங்களில் தனது மச்சான் வெங்கடேஷ் காளியண்ணனை அழைத்து சில பிராஜக்ட்டுகளை ஒப்படைத்துவிட்டு செல்கிறார்.
அவரும் மச்சான் சொல்வதை தட்டாமல் செய்து வருவதாக கூறுகிறார்கள் லோக்கல் அதிமுகவினர். திண்ணைப் பிரச்சாரம், பொது இடங்களில் வாக்கு சேகரித்தல் என்று அனைத்திலும் களம் இறக்கப்பட்டுள்ள முதல்வரின் மச்சான் வெங்கடேஷ் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவின் கடைசி தம்பியவார். இவரும் ஜெயலலிதா காலத்தில் இருந்தே சங்ககிரி ஒன்றிய மாணவரணி செயலாளராக பணியாற்றி வருகிறாராம்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications