கோவையில் இருந்து திருப்பதி போறீங்களா.. ரயிலில் போறவங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்க போகிறது
சேலம்: கோவையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அதிநவீன வசதிகளுடன் கூடிய எல்.எச்.பி. பெட்டிகள் கொண்டதாக மாற்றம் செய்யப்பட்டு இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த பெட்டிகளில் உயர்ரக குளிர்சாதன வசதிகள், ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்துடன் நீண்ட தூரம் பயணித்தாலும் சலிப்பு தட்டாமல் இருக்கைகள் பராமரிப்பு மற்றும் டிஸ்க் பிரேக் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வேயின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
உலக புகழ் பெற்ற ஏழுமலையான் திருக்கோவிலுக்கு பக்தர்கள் பலர் தினமும் சென்று வருகிறார்கள்.. குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் திருப்பதிக்கு சென்று வருகிறார்கள். கோவையில் இருந்தும், சென்னையில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் திருப்பதி செல்ல ரயில்கள் உள்ளன. தென்மாவட்டங்களில் இருந்தும் திருப்பதிக்கு வாரத்தில் சில நாட்கள் ரயில்கள் உள்ளது. இல்லை என்றால் காட்பாடி சென்றோ அல்லது சென்னை வந்தோ மாறி செல்ல முடியும்.

கோவையை பொறுத்தவரை திருப்பதிக்கு வாரத்தில் நான்கு நாட்கள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அதிநவீன வசதிகளுடன் கூடிய எல்.எச்.பி. பெட்டிகள் கொண்டதாக மாற்றம் செய்யப்பட்டு இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவையில் இருந்து ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக திருப்பதிக்கு வாரத்தில் 4 நாட்கள் செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இதே போல திருப்பதியில் இருந்து கோவைக்கு மறுமார்க்கத்தில், திங்கள், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதால் இதன் சேவையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
இதன் அடிப்படையில் கோவையில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலின் அனைத்து பெட்டிகளும் அதிநவீன வசதிகள் கொண்ட எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பெட்டிகளில் உயர்ரக குளிர்சாதன வசதிகள், ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்துடன் நீண்ட தூரம் பயணித்தாலும் சலிப்பு தட்டாமல் இருக்கைகள் பராமரிப்பு மற்றும் டிஸ்க் பிரேக் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த ரயில் சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இன்று முதல் எல்.எச்.பி. கொண்ட பெட்டிகளில் பயணிகள் பயணம் செய்யலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications