அதிவிரைவு ரிசல்ட்களை தரும் ரேபிட் டெஸ்ட் கருவி.. தமிழகத்தில் முதல்முறையாக பரிசோதனை தொடக்கம்
சேலம்: கொரோனா பாதிப்பை அரை மணிநேரத்தில் கண்டறிய உதவும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகத்திற்கு வந்துள்ள நிலையில் இன்று சேலத்தில் பரிசோதனை தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரை பிசிஆர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

பிசிஆர் எனப்படும் கிட் மூலம் பரிசோதனை முடிவுகள் வர நாள்கணக்கில் ஆகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிறது. எனவே ரேபிட் டெஸ்ட் கிட் எனப்படும் விரைவு சோதனை கருவி மூலம் பரிசோதனை செய்தால் அரை மணி நேரத்தில் முடிவுகள் கிடைக்கும். ஒரு நாளைக்கு நிறைய பேரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்யலாம்.
இதனால் சீனாவிலிருந்து தமிழகத்திற்கு ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வரவழைக்கப்பட்டன. அதன்படி முதல் கட்டமாக 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வந்துள்ளன. அதிலிருந்து சேலம் மாவட்டத்திற்கு 1000 கருவிகள் வந்தடைந்துள்ளன.
இதையடுத்து அங்கு பரிசோதனை தற்போது தொடங்கியுள்ளது. பிசிஆர் பரிசோதனை மூலம் ஆஎன்ஏ பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் ரேபிட் டெஸ்ட் மூலம் ஆன்டிபாடிகள் கண்டறியப்படுகிறது.
எனினும் பிசிஆர் கருவி மூலம் செய்யப்படும் பரிசோதனைகளே கொரோனா இருப்பதை உறுதி செய்வதாகும். ஏற்கெனவே தமிழகத்திற்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு வரவிருந்த டெஸ்ட் கிட்டுகள் வரவில்லை. அது அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications