ஹோட்டல்ல ரூம் போட்ட கணவர்.. கூடவே அந்த பொண்ணு.. திடீர்னு வீடியோகால்.. "லைவ்"வாக பார்த்து அலறிய மனைவி

ஏற்காடு லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை தந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சேலம்: கள்ளக்காதலர்கள் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருந்தபோது, திடீரென மனைவிக்கு வீடியோகால் செய்துள்ளார் அந்த கணவர்.. எனினும், துரிதமாக செயல்பட்டு, 2 உயிர்களையும் காப்பாற்றிவிட்டார் என்றே சொல்லலாம்.

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ்... வெல்லமண்டி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்... இவரது மனைவி பெயர் தமிழரசி.. திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள்..

வேலை பார்த்து வந்த வெல்லமண்டியில், தன்னுடன் பணிபுரியும் இளம்பெண்ணுடன், தர்மராஜுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.. அந்த பெண்ணுக்கு 20 வயதாகிறது..

 ஃப்ரண்ட்

ஃப்ரண்ட்

ஒருகட்டத்தில் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர்... வேலை முடிந்து வீட்டுக்கு வந்தாலும், அந்த பெண்ணுடன் எந்நேரமும் போனில் பேசி கொண்டே இருந்துள்ளார் தர்மராஜ்.. வீட்டுக்குள் நுழைந்தாலே, போனை எடுத்துக் கொண்டு, தர்மராஜ் தனியாக போய்விடுவாராம்.. ஓயாமல் பேசுவது, சிரிப்பது என்று இருந்து வந்துள்ளார்... இதை தமிழரசி கவனித்து வந்துள்ளார்.. போன்ல யார் என்று கேட்டால் "ஃபிரண்ட்' என்று மட்டும் சொல்வாராம்.. இதனால், தர்மராஜ் தூங்கும்போது, அவருக்கே தெரியாமல் அவரது செல்போனை எடுத்து பார்த்துள்ளார்.. அப்போதுதான், இவர்களுடைய கள்ளக்காதல் தெரியவந்துள்ளது..

 வெல்லமண்டி

வெல்லமண்டி

கணவரிடம் இதை பற்றி வெளிப்படையாகவே பேசி, கள்ளக்காதலை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.. ஆனால், தர்மராஜ் சம்மதிக்கவில்லை.. இதனால், வெறுப்படைந்த தமிழரசி, நேராக அந்த பெண் வேலை பார்க்கும் வெல்லமண்டிக்கே சென்றுவிட்டார்.. 2 குழந்தைகள் தனக்கு இருப்பதை சொல்லி, அந்த பெண்ணை கண்டித்துள்ளார்... இதனால் ஆத்திரம் அடைந்த தர்மராஜ், அந்த வெல்லமண்டிக்கு வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார்... ஆனாலும் தமிழரசிக்கு தெரியாமல், அடிக்கடி அந்த பெண்ணை தனிமையில் சந்தித்து வந்துள்ளார்.

 விஷம் விஷயம்

விஷம் விஷயம்

அதுவரை தமிழரசிக்கு மட்டுமே தெரிந்த விஷயம், இவர்கள் வெளியில் சந்தித்து பேசியதால், தர்மராஜ் குடும்பத்தினருக்கே தெரிந்துவிட்டது.. அதனால், மொத்த குடும்பமும் சேர்ந்து தர்மராஜை கண்டித்திருக்கிறார்கள்.. இந்நிலையில் நேற்று காலை திடீரென வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல், வெளியே கிளம்பினார் தர்மராஜ்.. தமிழரசியிடம் மட்டும் ஏற்காடு போறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி உள்ளார்.. தன்னுடைய கள்ளக்காதலியையும் ஏற்காடுக்கு வரச்சொன்னார்.

 வீடியோ கால்

வீடியோ கால்

ஏற்காட்டில் ஒரு லாட்ஜில், ரூம் எடுத்து, அங்கே அந்த பெண்ணுடன் தர்மராஜ் தங்கியிருக்கிறார்.. பிறகு மதியம், தமிழரசிக்கு வீடியோ கால் செய்த தர்மராஜ், "விஷம் குடிக்க போறேன்.. என்கூடதான் அந்த பொண்ணு இருக்காள்.. அவளும் விஷம் குடிக்க போறாள்.. நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம்" என்றார்.. அதைக் கேட்டு பதறிப்போன தமிழரசி, "தயவுசெய்து, அதுமாதிரி முடிவு எதுவும் எடுத்துடாதீங்க" என்று கெஞ்சினார்.. ஆனால், தர்மராஜ் எதையும் காதிலேயே வாங்கி கொள்ளவில்லை..

 லாட்ஜூக்குள் பகீர்

லாட்ஜூக்குள் பகீர்

தான் தங்கியிருந்த லாட்ஜின் பெயரை மட்டும் சொல்லிவிட்டு, விஷத்தை குடித்துவிட்டார்.. அடுத்த சில நிமிடங்களில் மயங்கியும் விழுந்துவிட்டார்.. இதை பார்த்து அலறிய தமிழரசி, என்ன செய்வது என்று தெரியாமல், உடனே காரில் ஏற்காட்டிற்கு கிளம்பினார்.. தர்மராஜ் சொன்ன அந்த லாட்ஜுக்குள் நுழைந்தார்.. அங்கே 2 பேருமே மயங்கி உயிருக்கு போராடி கிடந்தனர்.. அவர்களை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் தமிழரசி..

 FIRST AID

FIRST AID

அங்கு முதலுதவி அளித்தபிறகு, இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்... இதில் தர்மராஜூக்கு கூடுதல் சிகிச்சை தேவைப்படுவதாக டாக்டர்கள் சொல்லி உள்ளனர்.. அதனால், அவரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு அனுமதித்தார்.. இருவருக்குமே தனித்தனியாக சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்கிறது.. இந்த சம்பவம் ஏற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கள்ளக்காதலர்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.. முக்கியமாக, தமிழரசியின் மனநிலை எப்படி உள்ளது என்பது தெரியவில்லை..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+