ரூ.10 கோடி நில மோசடி.. 8 முறை மாறிய வில்லங்க சான்றிதழ்.. பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது
சேலம்: சென்னையில் ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்ததாக பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் பத்திரப்பதிவு டிஐஜியாக பணியாற்றி வந்தவர் ரவீந்திரநாத்... இவர் கடந்த 2021-ம் ஆண்டு, தென்சென்னை பத்திரப்பதிவு டிஐஜியாக பணியாற்றி வந்தார்..

போலி ஆவணங்கள்: அப்போது, தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு சொத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பதிவு செய்வதற்கு ரவீந்திரநாத் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. எனவே, பாதிக்கப்பட்டவர்கள், இதற்கான ஆதாரங்களுடன் புகார்களை தந்தார்கள்.
சென்னையை சேர்ந்தவர் சையத் அமான், பதிவுத்துறை ஐஜியிடம் ஒரு புகார் மனு அளித்திருந்தார்.. அந்த மனுவில், தாம்பரம் வரதராஜபுரத்தில் 85 சென்ட் நிலம் எனக்கு சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை எனது தந்தை 1980ம் ஆண்டு எனக்கு எழுதிக் கொடுத்தார். சமீபத்தில் இந்த நிலத்தை இசி செய்து பார்த்தபோது எனது தந்தை, இந்த நிலத்தை காந்தம்மாள் என்பவருக்கு விற்பனை செய்ததுபோல காட்டுகிறது. எனக்கு எனது தந்தை 1980ம் ஆண்டு எழுதிக் கொடுத்தார்.
பதிவுத்துறை: ஆனால் 1987ல் எனது தந்தை, அந்த நிலத்தை காந்தம்மாளுக்கு எழுதிக் கொடுத்ததுபோல ஆவணங்களை தயார் செய்து, போலியாக பதிவுத்துறை ஆவணங்களில் ஏற்றியுள்ளனர். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ10 கோடி. இதனால், ஒரிஜினல் ஆவணங்கள் என்னிடம் உள்ள நிலையில் போலியாக இடைச்செருகல் மூலம் பத்திரப்பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, போலியாக பதிவு செய்த ஆவணத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், உத்தரவிட்டிருந்தார்... அதன்படியே, புகாரில் தெரிவித்திருந்தது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து, இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி சங்கர்ஜிவாலுக்கு பதிவுத்துறை ஐஜி கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது...
தனிப்படை: சிபிசிஐடி ஐஜி அன்பு உத்தரவின்பேரில், எஸ்பி வினோத் சாந்தாராம், டிஎஸ்பி புருஷோத்தமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில், தற்போதைய சேலம் பதிவுத்துறை டிஐஜியாக இருந்த ரவீந்திரநாத், தென் சென்னை உதவி ஐஜியாக பணியாற்றியபோதுதான், இந்த தவறு நடந்திருப்பது தெரியவந்தது.
அதாவது, ரவீந்திரநாத்தே, அதில் விரல் ரேகை பதிந்து லாகின் செய்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்திருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, 8 முறை முறை வில்லங்க சான்றிதழ் முறைகேடாக மாற்றி வைத்திருக்கிறாராம்.
ரவீந்திரநாத்: அனைத்து புகார்களும் உறுதியானநிலையில்தான், நேற்றைய தினம் கைது செய்வதற்காக சிபிசிஐடி தனிப்படை போலீசார், சேலத்தில் உள்ள ரவீந்திரநாத் வீட்டுக்கு சென்றுள்ளனர்.. அங்கிருந்து போலீஸ் வேனில் சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
நேற்று இரவு முழுவதுமே, சென்னையிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து டி.எஸ்.பி. புருஷோத்தமன் அவரிடம் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.. முழுமையான விசாரணைக்கு பிறகே அவர் கைது செய்யப்பட்டார்... இப்போது அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பரபரப்பு : சென்னையில் ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்ததாக பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருவது, வருவாய்த்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications