Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"லெஸ்பியன்".. அதுவும் ஜெயிலுக்குள்ளேயே.. உறவில் குறுக்கே "புது வரவு".. யார் தெரியுமா.. மானமே போச்சு

சேலம் சிறைச்சாலையில் 2 பெண் வார்டன்கள் தகராறு செய்து கொண்டார்களாம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஜெயிலுக்குள்ளேயே கட்டி உருண்டுள்ளனர் 2 வார்டன்கள்.. அதுவும் பெண் வார்டன்கள்.. காரணம் என்னன்னு பாருங்க..!!

தவறு செய்தவர்களுக்கு தண்டனை அளிக்கப்படுவதின் நோக்கமே, அவர்களை சமூகத்தில் திரும்ப திருந்திய மனிதர்களாக மறுவாழ்வு வாழ வைப்பதற்காகத்தான்.

அவர்களை தனியாக சிறைச்சாலையில் வைப்பதால் தனிமையில் தன் தவறுகளை உணர ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்... அங்கு உடல் உழைப்பால் மறுவாழ்வில் வேலை செய்து வாழ தொழில் கற்க வாய்ப்பும் கிடைக்கும்...

 புழல் புகலிடம்

புழல் புகலிடம்

ஆனால், நம் நாட்டில், மக்கள் தொகை காரணமாகவும், பொருளாதார ஏற்ற தாழ்வாலும், குற்றம் செய்பவர்கள், தண்டனை பெற்று ஜெயிலில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்... அதனால் ஜெயிலுக்குள் திருந்துவதற்கான வாய்ப்புகளை விட, கெடுவதற்கான சூழலும் அதிகம் நிலவுவதாக ஒரு பேச்சு உள்ளது.. புழலில் இருந்துக்கொண்டே, மலேசியா, பங்களாதேஷ், மற்றும் வளைகுடா நாடுகளுக்கு நவீன செல்போன் மூலம் வாட்ஸ்அப் காலில் தங்களுடைய கூட்டாளிகளுடன் சில கைதிகள் பேசியதாககூட செய்திகள் பல வெளியாகி உள்ளன.

 லேடீஸ் வார்டன்

லேடீஸ் வார்டன்

அதேபோல தனிமனித ஒழுக்கங்களும் பலசமயங்களில் சீர்கெட்டு போவதாகவும், அதையொட்டி வன்முறைகள் சிறைக்குள்ளேயே நிலவி வருவதாகவும் கருத்துக்களும் உள்ளன.. அப்படித்தான் சேலத்தில் நடந்துள்ளது.. இதில் வேதனை என்னவென்றால், கைதிகளை கண்காணிக்க வேண்டிய வார்டன்களே ஒருவரையொருவர் தாக்கி கொண்டதுதான்.. அதுவும் பெண் வார்டன்கள்தான் இப்படியான காரியத்தில் ஈடுபட்டு அதிர வைத்துள்ளார்கள்.

 INK அழித்தல்

INK அழித்தல்

சேலம் பெண்கள் கிளைச்சிறையில் 45க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.. இங்கு 3 ஷிப்ட் அடிப்படையில் வார்டன்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் கடந்த சில வாரத்திற்கு முன்பு வெடித்துள்ளது.. பாரா புத்தகம் கிழிப்பு, இங்க் கொண்டு அழித்தல் போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.. இது தொடர்பாக கட்டுப்பாட்டு அதிகாரியான மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் விசாரணை நடத்தி வருகிறார்.

 லெஸ்பியன்

லெஸ்பியன்

இந்நிலையில் சிறையில் சில வார்டன்களிடையே லெஸ்பியன் பழக்கம் தொடர்பாக நடந்த அடிதடி சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வார்டனுக்கு விவாகரத்தாகிவிட்டது.. இவருடன் இன்னொரு பெண் வார்டனும் ஒன்றாக தங்கி வந்துள்ளனர்.. இந்த பெண்ணும், அவரது கணவரை பிரிந்து வாழ்பவராம்.. இவர்கள் 2 பேருமே ஒன்றாக வசித்துள்ளனர்... இருவருக்குமிடையே லெஸ்பியன் பழக்கமும் இருந்ததாக சொல்லப்படுகிறது.. இந்நிலையில் விவாகரத்தான வார்டன், இன்னொரு புது வார்டனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுவிட்டாராம்.. இதனால் கணவரை பிரிந்து வாழும் வார்டனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது..

 பொசசிவ்

பொசசிவ்

இதனால் "பொசசிவ்னஸ்" ஏற்பட்டுள்ளது.. என்னுடன் மட்டும்தான் பழக வேண்டும், பேச வேண்டும் என்று டைவர்ஸ் ஆன பெண்ணிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.. ஆனால், புதுப்பழக்கத்தை அவரால் கைவிடமுடியவில்லை... அதுமட்டுமல்லாமல், இப்படி கண்டிஷன் போட்டு மிரட்டுவதால், இத்தனை நாள் பழக்கத்தில் இருந்தவரை புறக்கணித்துள்ளார்.. இதுதான் தகராறாக இருவருக்கும் வெடித்துள்ளது.. 2 பேருமே சிறைக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். என் இஷ்டப்படி நான் யாரிடமும் பேசுவேன், பழகுவேன், நெருக்கமாக இருப்பேன், நீ எப்படி கேட்கலாம்? என்று விவாகரத்து வார்டன் சொன்னாராம்..

நகக்கீறல்கள்

நகக்கீறல்கள்

ஆனால், திடீரென இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது... ஒருவரை ஒருவர் முடியை பிடித்து இழுத்து சண்டை போட்டு, கட்டி உருண்டுள்ளனர்.. சக வார்டன்கள் ஓடி வந்து இவர்களின் சண்டையை விலக்கிவிட்டுள்ளனர்... இதில் விவாகரத்தான வார்டனுக்கு முகம், கைகளில் நகக்கீறல் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியதாம்.. இந்த மோதல் விவகாரம் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஓ காட்

ஓ காட்

இதுகுறித்து வார்டன்கள் சொல்லும்போது, 2 வார்டன்களும் நைட் நேரங்களில் சிறைக்குள்ளேயே உறவு வைத்துக்கொள்கின்றனர். இப்படியெல்லாம் சேர்ந்து வாழ, எங்களை போன்றோருக்கு கோர்ட்டே அனுமதி தந்துவிட்டது என்று சொல்லி ஓபனாகவே உறவு வைத்து வந்துள்ளனர்.. திடீரென இன்னொருவர் நபர் உள்ளே என்ட்ரி ஆகவும், மோதல் வெடித்துவிட்டது.. இதில் ஒருவர், கைதிகளை பார்க்க வரும் சொந்தக்காரர்களிடம் இருந்து பணம் வசூலித்து, உயர்அதிகாரிக்கு கொடுத்து வருகிறார்... இதனால்தான் இப்படி ஒரு சண்டையை அவர் கண்டுகொள்ளவேயில்லை என்கின்றனர்.. எனினும் இந்த விவகாரம் முற்றி மோதலாக வெடித்துவிட்டதால், இதுகுறித்து சிறை விஜிலென்ஸ் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளார்களாம்.. ஓ மை காட்..!!!

 நியூ வார்டன்

நியூ வார்டன்

இந்த சம்பவம் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, உதவி பெண் வார்டன் ஒருவர் பணிக்கு லேட்டாக வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த மற்றொரு உதவி வார்டன், தாமதம் குறித்து அங்கிருந்த பாரா புத்தகத்தில் எழுதினாராம். ஆனால் அந்த பக்கத்தை, தாமதமாக வந்த உதவி வார்டன் கிழித்து எறிந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம் அப்போதே புகாரும் தரப்பட்டுள்ளது.. அதன்பேரில் அதிகாரிகள் விசாரணையும் ஒருபக்கம் நடந்துவருகிறது.

 2 லெஸ்பியன்

2 லெஸ்பியன்

இதற்கிடையில் புகாருக்கு ஆளான உதவி வார்டன் அங்கிருந்து வேறு ஒரு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.. ஆனாலும், பெண்கள் சிறையில் பணியாற்றும் வார்டன்கள் 2 பேர் லெஸ்பியன் விவகாரத்தில் மோதலில் ஈடுபட்டதாக தகவல் பரவியதால், சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது... இதுகுறித்து சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் சொல்லும்போது, "லெஸ்பியன் விவகாரத்தில் பெண் வார்டன்கள் மோதி கொண்டதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. அதுபோன்ற சம்பவம் சிறைக்குள் நடக்கவில்லை. இருந்தாலும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+