Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அபிராமி"யை ஞாபகமிருக்கா.. அவரையே மிஞ்சிய கலைவாணி.. தலைக்கேறிய காமம்.. அய்யோ கொடுமை.. ஹைலைட் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சேலம்: கள்ளக்காதல் பெருகி கொண்டே வரும் சூழலில், அது தொடர்பான குற்றங்களும் பெருகி வருகிறது.. தனிமனித ஒழுக்கங்கள் எப்போதெல்லாம் சீர்குலைகிறதோ, அப்போதே வன்முறைகளின் தாண்டவமும் அதிகரிக்க ஆரம்பித்துவிடுகிறது..!!

அபிராமியின் அட்டகாசத்தை பார்த்து அன்று தமிழகமே அதிர்ந்து போனது.. 2018-ல் நடந்த இந்த கொடிய சம்பவம் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது.

குன்றத்தூர் அபிராமி என்றாலே பிரபலம்.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற 2 குழந்தைகளையும், பாலில் விஷம் வைத்து கொன்றவர் இந்த குன்றத்தூர் அபிராமி.

இது தொடர்பான வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து தரப்பிலும் விசாரணை நடந்து முடிந்துள்ளதாக தெரிகிறது.. அபிராமி மீது குற்றம் நிரூபணமாகி உள்ளதால், தீர்ப்பு விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள். ஆனால், இப்போதுவரை தீர்ப்பு எதுவும் வரவில்லை.

 Did the young woman married four and what happened to the one year baby near Tharamangalam salem

அபிராமி, அபிராமி: சிறையில் இருக்கும்போது, அபிராமி மனம் வருந்தி சகபெண் கைதிகளிடம் நிறைய வருத்தப்பட்டாராம்.. "தப்பு பண்ணிட்டேன்.. என் குழந்தைகளை கொன்றிருக்க கூடாது.. அவங்க போட்டோவையாவது என்கிட்ட காட்டுங்க" என்று கதறி அழுதிருக்கிறார்.. அழுது அழுது புரண்டாலும் மாண்டுபோன பிஞ்சுகள் திரும்ப வந்துவிட போகிறதா என்ன? ஆனால், அடுத்தடுத்த "அபிராமிகள்" இன்னமும் இங்கு உருவாகி கொண்டுதான் இருக்கிறார்கள்..

 Did the young woman married four and what happened to the one year baby near Tharamangalam salem

பிஞ்சுகள்: அதிலும், உலகமே அறியாத, பிஞ்சு குழந்தைகளை, பெற்ற தாயே துடிதுடிக்க கொல்வதையும், நினைச்சுகூட பார்க்க முடியாத அளவுக்கு கொடூர சித்ரவதைகளை செய்வதையும், நம்மால் ஜீரணிக்கவே முடிவதில்லை.. இதுபோன்ற "அபிராமிகளின்" அட்டகாசங்களும் அடங்குவதில்லை... இதோ இன்னொரு அபிராமி தாரமங்கலத்தில் உருவாகி உள்ளார்..

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர் மல்லேஷ்.. 32 வயதாகிறது.. இவருக்கு கல்யாணமாகி மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள்.. சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே புதூர்காடம்பட்டியில் தங்கி, செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார் மல்லேஷ்.. அதே சூளையில் சக்திவேல் என்பவர் வேலை செய்கிறார்.. சத்தியமங்கலம், புதுவடவள்ளியை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கும் கல்யாணமாகிவிட்டது.. மனைவி பெயர் கலைவாணி, 27 வயதாகிறது.. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது..

 Did the young woman married four and what happened to the one year baby near Tharamangalam salem

உல்லாசம் & ஜாலி: இதில், கலைவாணியுடன் மல்லேஷூக்கு பழக்கம் ஏற்பட்டு, அதுவே தகாத உறவாக மாறியிருக்கிறது.. 2 பேரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி ஜாலியாக இருந்து வந்துள்ளனர்.. ஒருகட்டத்தில் மல்லேஷை பிரிந்து கலைவாணியால் இருக்க முடியவில்லை.. அதனால், ஒரு வயது கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு, கலைவாணி மல்லேஷூடன் ஓடிவிட்டார்.. இருவரும் ஓமலூர் அருகே புதூர்காடம்பட்டியில் புது வாழ்க்கையை துவங்கி உள்ளனர். அங்கிருந்த ஒரு செங்கல் சூளையில், தம்பதி என்று சொல்லி வேலைக்கும் சேர்ந்துள்ளனர்..

ஈவிரக்கம்: நாளாக நாளாக, கலைவாணியின் குழந்தையின்மீது மல்லேஷூக்கு வெறுப்பு வந்தது.. வேறு ஒருவருக்கு பிறந்த குழந்தையை, தன்னால் வளர்க்க முடியாது என்று மல்லேஷ் சொல்லி வந்துள்ளார்.. சம்பவத்தன்று இரவு, 2 பேருமே சேர்ந்து தண்ணி அடித்துள்ளனர்.. பிறகு உல்லாசமாகவும் இருந்துள்ளனர். அப்போது குழந்தை திடீரென அழுதுள்ளது.. இதனால், ஆத்திரம் அடைந்த 2 பேரும், அந்த குழந்தையை ஈவிரக்கமில்லாமல் சுவற்றில் தூக்கி அடித்துள்ளனர்..

இதில், குழந்தை படுகாயமடைந்து ரத்தம் கொட்டியுள்ளது.. ஆனால், மறுநாள்தான், குழந்தையை ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தூக்கி சென்று காண்பித்தனர். ஆனால், படுகாயமடைந்து நேரமாகிவிட்டதால், குழந்தை நிலைமை சீரியஸாகிவிட்டது.. உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், குழந்தை நேற்று இறந்துவிட்டது.. தாரமங்கலம் போலீசாருக்கு இது சம்பந்தமாக தகவல் தரப்பட்டது..

ஹைலைட்: ஆனால், அதற்குள் இந்த கள்ள ஜோடி மிஸ்ஸாகிவிட்டனர்.. பிறகு போலீசார் இவர்களை சல்லடை போட்டு தேடியலைந்து, இறுதியில், கர்நாடகாவில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்தது.. அங்கு சென்று சுற்றிவளைத்து 2 பேரையும் கைது செய்தனர்.. இதில் என்ன ஒரு ஹைலைட் என்றால், கலைவாணிக்கு ஏற்கனவே 3 கணவர்களாம்.. 4வதாக வாக்கப்பட்டவர்தான் மல்லேஷ்..!!!

இதுல கொடுமை என்னவென்றால், அன்றைய தினம் நள்ளிரவு, குழந்தையை மல்லேஷூம், கலைவாணியும் மாறி மாறி அடித்துள்ளனர்.. குழந்தை வலியால் அழுதுகொண்டே இருக்கவும்தான், அதன் காலை பிடித்து, சுவற்றில் ஓங்கி அடித்திருக்கிறார்கள்.

இதில் வழக்கத்துக்கு மாறாக குழந்தை கதறவும், அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர்.. குழந்தைக்கு என்ன ஆச்சு? என்று கேட்டதற்கு, உடல்நிலை சரியில்லை என்று மட்டும் கலைவாணி சொன்னாராம்.. மறுநாள் காலையில், மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்லாமல் போனால், அக்கம்பக்கத்தினர் சந்தேகப்படுவார்கள் என்பதால், குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, 2 பேருமே தலைமறைவாகி இருக்கிறார்கள். குழந்தை இறந்த விஷயம்கூட கலைவாணிக்கு தெரியாது.. போலீசார் இவர்களை கைது செய்தபோதுதான், தெரியவந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+