மாம்பழமாம் மாம்பழம்.. மல்கோவா மாம்பழம்.. 39 ஆண்டுகள் கழித்து சேலம் எம்பி தொகுதியை கைப்பற்றிய திமுக!
சேலம்: சேலம் மக்களவை தொகுதியை 39 ஆண்டுகள் கழித்து திமுக கைப்பற்றியுள்ளதால் அண்ணா அறிவாயலத்தில் ஒரே கொண்டாட்டம் நடந்து வருகிறது.
மாம்பழத்துக்கு பெயர் போனது சேலம். இது ஓமலூர், வட சேலம், தென் சேலம், மேற்கு சேலம், வீரபாண்டி, எடப்பாடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை கொண்டது சேலம் மக்களவை தொகுதியாகும்.
முதல் முறையாக கடந்த 1952-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் எஸ்வி ராமசாமி தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து 1967-ஆம் ஆண்டு முதல் இரு முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. பின்னர் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

சேலம்
இதைத் தொடர்ந்து சேலம் தொகுதியில் கடந்த 1980-ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு எம்பியானார். பின்னர் காங்கிரஸ் கட்சியும் அதிமுகவும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தன.

திமுக தோல்வி
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சேலத்தில் அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வம் 5,51,546 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட உமாராணி 2,88,936 வாக்குகள் பெற்றார்.

திமுக தொண்டர்கள்
இந்த நிலையில் 39 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் நேரடியாக திமுக களம் கண்டது. இந்த தொகுதியை எப்படியாயினும் கைப்பற்ற வேண்டும் என திமுக தொண்டர்கள் கடுமையாக போராடினர்.

எஸ் ஆர் பார்த்திபன்
திமுக சார்பில் சேலத்தில் எஸ் ஆர் பார்த்திபன் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் கே ஆர் சரவணன் போட்டியிட்டார். இந்த நிலையில் எஸ் ஆர் பார்த்திபன் வெற்றி பெற்றுள்ளார். இதனால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications