திமுக தான் எதிரி..யார் கூட வேண்டுமானாலும் கூட்டணிக்கு தயார்! பாஜகவுக்கு பச்சை கொடி காட்டிய எடப்பாடி!
சேலம்: பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது தொடர்பாக கேள்வி கேட்கிறார்கள். திமுகவை வீழ்த்துவதற்கு வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெறுவதற்கு யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம். திமுக தான் எங்கள் எதிரி. திமுகவைத் தவிர எங்களுக்கு வேறு யாரும் எதிரி இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது கண்டிக்கத்தக்கது. கடலில் எல்லை தெரியாமல் மீன் பிடிப்பவர்களை எச்சரித்துதான் அனுப்ப வேண்டும். இந்தியா - இலங்கை அரசுகள் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும்.

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும் அவர்களின் உடமைகளை பறிப்பதையும் ஏற்க முடியாது. கச்சத்தீவை தாரை வார்த்தது யார் என்று அனைவருக்கும் தெரியும். யார் ஆட்சியில் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது.
தர்மபுரியில் ஆட்சியர், எஸ்பியை மிரட்டுகிறார் திமுக பிரமுகர். ஆட்சியர் காவல்துறை அதிகாரிகளே மிரட்டப்படும் ஆடியோ வெளியாகிறது. திமுக ஆட்சியில் அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். அதிமுகவையும் எடப்பாடி பழனிச்சாமியையும் விமர்சித்து என்ன பயன். திமுகவை வீழ்த்துவதே அதிமுகவின் குறிக்கோள்; வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி இல்லை.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது தொடர்பாக கேள்வி கேட்கிறார்கள். திமுகவை வீழ்த்துவதற்கு வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெறுவதற்கு யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம். திமுக தான் எங்கள் எதிரி. திமுகவைத் தவிர எங்களுக்கு வேறு யாரும் எதிரி இல்லை. தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பு கூட்டணி தொடர்பான தகவல்கள் அறிவிக்கப்படும். "அப்பா" வார்த்தை குடும்பத்தில் பிரச்சினை ஆகும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. கூட்டணி குறித்து அப்போது பார்க்கலாம்.
தொடர்ந்து தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படுமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள எடப்பாடி பழனிசாமி," கடந்த மக்களவைத் தேர்தலின் போது மக்களவைத் தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது ஆனால் ராஜ்யசபா சீட்டு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எதுவாக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் பேசிக்கொள்ளலாம் எங்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை" என்றார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications