மோடி பிரதமரான மே 27 எங்களுக்கு இனி துக்க நாள்- ஆ.ராசா! ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை நாளுக்கு பதிலடி!
சேலம்: 50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திரா காந்தி அம்மையார் அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தியதை முன்வைத்து ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை நாள் என்கிறது பாஜக.. இதற்கு பதிலடியாக மோடி பிரதமராக பதவியேற்ற மே 27-ந் தேதியை கறுப்புச் சட்டை அணிந்த அனைத்து பெரியார் இயக்கங்களும் இனி துக்க நாளாக கடைபிடிக்க வேண்டும் என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி வலியுறுத்தினார்.
நீட் தேர்வுக்கு எதிரான திராவிடர் கழகத்தின் சைக்கிள் பயண பிரசார நிறைவுப் பொதுக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆ.ராசா பேசியதாவது: நாம் நீட் தேர்வே மோசடி என்கிறோம். வடக்கே நீட் தேர்வுக்குள் நடந்த மோசடி பற்றி பேசுகிறார்கள். நீட்டைப் பற்றி பேசினால், ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசினால், பொருளாதார இடஒதுக்கீடு தவறு என பேசினால், சமூக நீதியைப் பேசினால், விஸ்வகர்மாவைப் பேசினால், மதவாதம் பற்றி பேசினால் அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கிற ஒரே ஆயுதம் அவசர நிலை பிரகடனம் கறுப்பு தினம் என்பதுதான்.

இனிமேல் திராவிடர் கழகம், பெரியாரைக் கொண்டாடுகிற அனைத்து இயக்கங்களும் அம்பேத்கரைக் கொண்டாடுகிற அனைத்து இயக்கங்களும் அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுகிற அனைத்து இயக்கங்களும் ஜூன் 25 அவர்கள் கறுப்பு நாள் என்று சொன்னால் மே 27-ல் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டாரே மோடி, அந்த நாளை துக்க நாளாக இனிமேல் அனுசரிக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் நாங்கள் கேட்டால் பதில் இல்லை. சென்ற நாடாளுமன்றத்திலேயே நீட் தேர்வால் உயிரிழந்தோர் எண்ணிக்கை எத்தனை என கேட்டேன். ஆனால் மத்திய அரசோ அதுபற்றி கணக்கெடுக்கவில்லை என சொன்னது. ஐஐடிகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோர் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என நாடாளுமன்ற நிலைக்குழுவில் கேட்டேன். அதேபோல பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு பெற்ற முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாண்வன் ஏன் தற்கொலை செய்யவில்லை என கேட்டேன்? அதற்கு ஐஐடி தலைவர்களிடம் பதில் இல்லை.

அவசர நிலை பிரகடனம் என்பது தனிமனிதர்களுக்கு எதிராக, இயக்கங்கள்- கட்சிகளுக்கு எதிரான கொடுமையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஜக அரசு செய்வது அரசியல் சாசனத்துக்கு எதிரான கொடுமை; இந்தியாவுக்கே எதிரான கொடுமை. அதனால்தான் நாடாளுமன்றத்தில், குற்றச்சாட்டுகளுக்கு பதிலே சொல்லாத 'முதுகெலும்பு' இல்லாத பிரதமர் மோடி என்றேன். இவ்வாறு ஆ.ராசா பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications