கொடநாடு கொலை கொள்ளை சர்ச்சை! கனகராஜ் அண்ணன் தனபாலுக்கு நெஞ்சுவலி! சேலம் அரசு மருத்துவமனையில் அட்மிட்
சேலம்: கொடநாடு கொலை கொள்ளை சர்ச்சையில் சிக்கி விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபாலுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சேலம் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் ஆகிய இருவருக்கு எதிராகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தவர் கனகராஜின் அண்ணன் தனபால்.

நேற்று முன் தினம் கூட இந்த வழக்கு தொடர்பாக கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தனபால் விசாரணைக்கு ஆஜராகினார். இந்த சூழலில் இன்று அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் அரசு மருத்துவமனையில் தனபாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதுடன் உடல்நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் தன்னிடம் பேரம் பேசினார்கள் என்பன உட்பட இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை தனபால் முன் வைத்த வண்ணம் இருந்தார்.
இதனிடையே தனபால் அவதூறு பரப்புவதாக கூறி அவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கான பணிகளில் இளங்கோவன் ஈடுபட்டு வருகிறார். கனகராஜ் அண்ணன் தனபாலை பொறுத்தவரை நில மோசடி புகார் ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications