ட்விஸ்ட்.. எம்எல்ஏ பதவிக்கே சிக்கல்? வேட்புமனுவில் எடப்பாடி பழனிசாமி குளறுபடியா? பாய்ந்தது வழக்கு
சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பிரிவுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பொதுவாக சட்டசபை தேர்தல் தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கலின் போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

தங்களின் சொத்து விவரங்களை அவர்கள் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். இதில் பொய்யான விவரங்களை வெளியிடும் பட்சத்தில் அந்த வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதோடு இதில் பொய்யான விவரங்களை வெளியிட்டால் சமயத்தில் எம்எல்ஏ பதவிக்கு கூட சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் ஒருவருக்கு எம்எல்ஏ பதவிக்கே ஆபத்து ஏற்படும்.
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி எனபவர் கடந்த மாதம் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் தேர்தல் ஆணைய வேட்புமனுவில் பிரமாண பத்திரத்தில் எடப்பாடி பழனிசாமி தவறான விவரங்களை தாக்கல் செய்துள்ளார்.
இதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி வழக்கு தொடுத்தார். இந்த விவகாரத்தில், இதில் உடனே விசாரிக்க வேண்டும் .
முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும் என்று சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
வழக்கு
இந்த நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பிரிவுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
2021 சட்டப்பேரவை தேர்தலின் போது வேட்புமனுவில் சொத்துமதிப்பை குறைத்துக் காட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி 125ஏ(1), 125ஏ(I), 125ஏ(II) பிரிவுகளின் கீழ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி வழக்கு
முன்னதாக சேலம் கோர்ட் தனக்கு எதிராக வழக்கு பதிய அனுமதி அளித்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி, நான் அவரின் தொகுதியை சேர்ந்தவர் கிடையாது. எனக்கும், அவர் தொகுதிக்கும் தொடர்பே கிடையாது. என் வேட்புமனுவில் எந்த விதமான தவறான தகவலும் இல்லை.
அதோடு அவர் தேர்தலிலும் போட்டியிடவில்லை. அப்போதே புகார் அளித்து இருக்கலாம். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பின் புகார் அளித்து உள்ளனர். இதில் சேலம் கோர்ட் எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளது.
முகாந்திரம் இருந்தாலும் வழக்கு பதிவு செய்யலாம் என்று அனுமதி அளித்து உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அவர் தனது விசாரணையில் இந்த விவகாரத்தை ஜூன் 6ம் தேதி வரை பெரிதாக்காமல் இருக்கவும் என்று கூறி ஜூன் 6ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்த நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பிரிவுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
-
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications