விஜய் காஸ்ட்லி முதல்வர்.. யார் வீட்டு பணத்துல கடல் காற்று வாங்கறீங்க.. எடப்பாடி கிழி

Subscribe to Oneindia Tamil

சேலம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தவெகவை கடுமையாக விமர்சிக்கின்றன. இந்த 2 தொகுதிகளிலும் முன்பு அதிமுக வெற்றி பெற்றிருந்தது. தவெகவை தோற்கடிப்பதை அதிமுக கௌரவ பிரச்சனையாக பார்க்கிறது. புதிய தலைமை செயலகம், தமிழக அரசின் கடன் விவகாரங்களில் விஜயை எடப்பாடி பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மதுராந்தகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, எடப்பாடியில் எங்கள் வேட்பாளர் போட்டியிட்டிருந்தார் நான் வெற்றி பெற்றிருக்க முடியாது. தோல்வியடைந்திருப்பார் என்கிறார். தம்பி தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவன் நான். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் அதிமுக 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

edappadi-palanisamy-slams-vijay-over-new-secretariat-building

ஆதவ் மீது விமர்சனம்

சரியாக தெரியாமல் பேசாதே. உன் மாதிரி பல கட்சிக்கு போயிட்டு வந்தவன் நான் இல்லை. சாதாரண கிளைச் செயலாளராக இருந்து, இந்த இயக்கத்தின் பொதுச்செயலாளராக வந்தவன் நான். உழைப்பால் வளர்ந்தவன் நான். ஆதவ் அர்ஜுனா முதலில் திமுகவில் இருந்தார். அங்கே சபரீசனுக்கு பெட்டி தூக்கி கொண்டிருந்தார். அடுத்து விசிகவில் இணைந்தார். விசிகவில் இருந்து வெளியேறிய பிறகு ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் இணைய முயற்சித்தார்.

என்னை சந்தித்து ஆதவ் பேசினார். அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வேண்டுமென அவர் கேட்டார். அவரிடம், தம்பி இந்தக் கட்சியில் பதவி விற்பது கிடையாது. உழைப்பவர்களுக்கு தான் பதவி கிடைக்கும் என்று கூறினேன். அதன்பிறகு தவெகவில் இணைந்தார். தற்போது தவெகவை அவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். நீ எல்லாம் பேசலாமா. அதிமுகவை பற்றி பேச தகுதியில்லை.

தவெகவில் இருப்பாரா

விசிலும், இரட்டை இலையும் என்று என ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். அவர் சரியில்லை. அதிமுக, தவெக வேறு. அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 35 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துள்ளோம். தவெக ஆட்சியில் இருக்குமா என்பது போக போக தான் தெரியும். அவரெல்லாம் வேடந்தாங்கல் பறவை போல பல கட்சிக்கு சென்று தவெகவில் இணைந்துள்ளார். அவர் கடைசி வரை தவெகவில் இருப்பாரா என்பதை முதலில் பார்ப்போம்

முதலமைச்சருக்கு ரூம் பத்தவில்லையாம். மக்கள் தங்குவதற்கு குடிசை இல்லையாம். நாட்டின் பல முதலமைச்சர்கள் அந்த அறையில் தான் பணியை மேற்கொண்டார்கள். நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10வது மாடியில் கடல் காற்று வாங்க அறை கட்டப்படுகிறது. இவர் காஸ்ட்லி முதலமைச்சர். இவரா ஏழைகளை காப்பாற்ற போகிறார். கண்ணாடியை திறந்தால் கடலை பார்த்து காற்று அவர் மீது பட வேண்டும். இது யார் வீட்டு பணம்.

தலைமை செயலகம் தேவையா

தமிழக அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பதாக தவெக வெள்ளை அறிக்கை வெளியிட்டது. இவ்வளவு கடன் வைத்து கொண்டு எப்படி புதிய தலைமை செயலகம் கட்ட முடியும். ஆண்டுக்கு ரூ.75,000 கோடி வட்டி மட்டும் கட்ட வேண்டும். இந்த நிலையில் புதிய தலைமை செயலகம் வேண்டுமா. சட்டமன்றமே பட்டிமன்றம் ஆகிவிட்டது. தெரு சண்டை, குழாய் சண்டை போல ஆகிவிட்டது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+