உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!
சேலம்: ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்த்திருந்தால் மொத்தமாக விற்பனை செய்திருப்பார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஓபிஎஸ்ஸை பி டீமாக்கி அதிமுகவை உடைக்க முயற்சித்தது திமுக என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்களை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தில் ஒவ்வொரு நாளும் தனிமனித விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக விமர்சித்து எல்லை மீறினார். இதனை 2019 லோக்சபா தேர்தலின் போதே எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார்.

இதையடுத்து உதயநிதி ஸ்டாலினை, பால்டாயில் குடித்து போயிருக்க வேண்டும்.. இருந்து கொண்டு நம் உயிரை வாங்குவதாக பேசி அதிர்ச்சி ஏற்படுத்தினார். இது அதிமுகவினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை "அந்த ஆள்" என்று ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஏற்கனவே முக்குலத்தோர் சமூக மக்கள் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் சூழலில், ஓபிஎஸ்ஸை ஒருமையில் விமர்சித்திருப்பது விவாதமாகி இருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்யக் கூடியவராம்.. யாருக்கு துரோகம் செய்தோம்? எங்கள் கட்சியில் இருந்தவர்களை பி டீமாக்கி அதிமுகவை உடைக்க நினைத்த திமுகவே துரோகி.
நம்மிடம் இருந்தவர் எங்கு இருக்கிறார். அதிமுகவில் ஓபிஎஸ்க்கு எவ்வளவு மரியாதை கொடுத்தோம். ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தோம். துணை முதல்வர் பதவி கொடுத்தோம். அவரை பி டீமாக்கி கட்சியை உடைக்க நினைத்த துரோகிகள்.. உன்னை கட்சியில் சேர்த்திருந்தால், அதிமுகவையே விற்பனை செய்துவிட்டு போயிருப்பீர்கள்.
அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்களை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா மன்னிக்காது என்று விமர்சித்துள்ளார். அதேபோல் தென் மாவட்டங்களில் பிரச்சாரங்களில் பங்கேற்ற போது எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் தொடர்பாக வாய் திறக்கவில்லை. தற்போது சொந்த ஊரில் வைத்து ஓபிஎஸ்ஸை விமர்சித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!












Click it and Unblock the Notifications