ஸ்டாலினின் தரம்தாழ்ந்த அரசியல்! ரெஸ்ட் ரூம் போனாலும் சொல்லிட்டுதான் போகணுமா? எடப்பாடி பழனிசாமி கோபம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை (Edappadi Palanisamy AmitShah meeting)சந்தித்துவிட்டு வந்த போது முகத்தை மூடிக் கொண்டு வந்ததாக சொன்னார்கள். ஆனால் நான் கர்சிப்பால் முகத்தை துடைத்தேன். இதை வீடியோ எடுத்து அவதூறு பரப்புவதா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சேலம் மாவட்டம் ஓமலூரில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் டெல்லிக்குச் சென்று அமித்ஷாவை சந்தித்தது குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.

Edappadi Palaniswami Questions Misleading Video Claim on Amit Shah Meeting in Delhi

கடந்த 16 ஆம் தேதி நான் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனை சந்திக்க டெல்லி சென்றேன். அப்போது அன்றைய தினம் இரவு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினேன். அப்போதும் நான் அரசாங்க காரில் சென்று சந்தித்துவிட்டு வெளியே வந்தேன். அப்போது காரில் ஏறும் போது கர்சிப்பால் நான் முகத்தை துடைத்தேன்.

கர்சிப்பால் துடைத்தேன்

இதை சில ஊடகங்கள் வீடியோ எடுத்து, நான் கர்சிப்பால் முகத்தை மூடியபடி சென்றதால் பொய்யான தகவல்களை பரப்பினார்கள். இது வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இந்தியாவுக்கு முன்னுதாரணமாக இருக்கும் ஊடகங்கள் இப்படி தரம்தாழ்ந்து அரசியல் செய்கிறார்கள்.

கர்சிப்பை மூடிக் கொண்டு

கர்சிப்பை மூடிக் கொண்டு நான் செல்ல வேண்டிய அவசியம் என்ன, போகும் போது பகிரங்கமாகத்தானே போனேன். வரும் போது ஏன் நான் முகத்தை மூட வேண்டும். எனக்கு சொல்வதற்கு கஷ்டமாக இருக்கிறது. இனி ரெஸ்ட் ரூம் போனால் கூட ஊடகங்களுக்குச் சொல்லிவிட்டுதான் போக வேண்டும் என்ற நிலை வரும் என காட்டமாக பேசினார்.

முதல்வர் பேசுவது அழகல்ல

அவர் மேலும் கூறியதாவது: நான் முகத்தை மறைத்ததால், ஒரு முதலமைச்சர் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார். இவ்வாறு பேசுவது அவருக்கு அழகல்ல.

திமுக அரசு

திமுக அரசை அகற்றுவதில் மக்களும் உறுதியாக இருக்கிறேன். திமுக அரசை அகற்ற தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். அதிமுக ஆட்சி இருந்த போது பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டிய ஸ்டாலின், தற்போது முதல்வரானதும் ரத்தினக் கம்பளம் விரிக்கிறார்.

நீட் தேர்வு

நீட் விவகாரத்தில் ஸ்டாலின் பேசுவதெல்லாம் பொய் சொல்லி வருகிறார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டேன் என அமித் ஷா ஏற்கெனவே கூறிவிட்டார். பாஜகவுக்கு அமித்ஷாவும், அதிமுகவுக்கும் நானும் சொல்வதுதான் இறுதியானது. எனவே இனியும் அதிமுக உள்விவகாரத்தில் அமித்ஷா தலையீடு என்பது குறித்து யாரும் கேட்க வேண்டாம். இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைக்க வேண்டாம். ஐடிசி ஹோட்டலில் வைத்து அமித்ஷாவே சொன்ன பிறகும் இவ்வாறு ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில் செய்தி வெளியிடுவது தவறு!

அமித்ஷா வீட்டில்

நான் அமித்ஷா வீட்டில் இருந்து வரும் போது தொழிலதிபருடன் வந்தேனா என்றெல்லாமா கேட்பீர்கள். நான் யாருடன் எந்த காரில் சென்றால் உங்களுக்கு என்ன, உங்களுக்கு தேவை அமித்ஷாவை நான் சந்தித்தது மட்டும்தானே, அதை மட்டும் பாருங்க. இவ்வளோ கேள்வி கேட்குறீங்களே! முதல்வர் வெளிநாட்டுக்கு போனாரே அது குறித்து எந்த ஊடகமாவது கேட்கிறீர்களா? அவரை கேட்க மாட்டீர்கள்.

முத்துராமலிங்கத் தேவர்

முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டுமென உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+