ஆதவ் அர்ஜுனா என்னை சந்தித்து துணை பொதுச்செயலாளர் பதவி கேட்டார்.. சேலத்தில் போட்டு உடைத்த எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவை ஆதவ் அர்ஜுனா குத்தகைக்கு எடுத்துவிட்டார் என்று சேலத்தில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசினார். தேர்தலுக்கு முன்பு ஆதவ் அர்ஜுனா என்னை வந்து சந்தித்து அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி கேட்டார். அதற்கு நான், அதிமுக கட்சியில் பதவி விற்பது கிடையாது, உழைப்பவர்களுக்கே பதவி என சொன்னேன். அதன்பிறகு தவெகவிற்கு சென்று அக்கட்சியை குத்தகைக்கு எடுத்துவிட்டார் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

மேலும் கரூர் சம்பவத்தின் போது வீர வசனம் பேசிய ஆதவ் அர்ஜுனா வெளிமாநிலத்தில் சென்று தங்கிவிட்டார் என்றும் அந்த கட்சியின் தலைமை அலுவலகமே 15 நாட்களுக்கு மூடப்பட்டு விட்டதாகவும் விமர்சித்தார்.

Edappadi Palaniswami speak in Salem Aadhav Arjuna has leased TVK party

தமிகத்தில் தவெக ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் ஆகிறது. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை 40 சதவீதம் வரை உயர்ந்துவிட்டது. விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களை பற்றி எந்த கவலையும் கிடையாது. ரீல்ஸை மட்டுமே மூலதனமாக வைத்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. இதனால் அவர்கள் தலை, கால் புரியாமல் ஆடுகிறார்கள்.

புதிய தலைமை செயலகம் தேவையா?

முதல்வர் விஜய்க்கு தலைமை செயலகத்தில் இருக்கும் அறை போதுமானதாக இல்லையாம்.. எனவே நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது மாடியில் ரூ.10 கோடியில் புதிய அறை கட்டப்படுகிறது. ஏன் இதே தலைமை செயலகத்தில் தான் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து நானும் முதல்வராக இருந்து அதே அறையில் தான் மக்கள் பணிகளை கவனித்தேன்.

பட்டினபாக்கத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட உள்ளது. எதற்கு என்றால், அவருக்கு கடற்கரை காற்று வீச வேண்டும் என்பதால்..ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கும் என்றும், அதற்காக ஆண்டுக்கு ரூ.78 ஆயிரம் கோடி மட்டும் வட்டி கட்ட வேண்டும் என்று கூறினர். அப்படி இருக்கும்போது புதிய தலைமை செயலகம் தேவையா?.

எப்போது வேண்டுமானாலும் கவிழும்

சட்டசபை தற்போது பட்டிமன்றம் போல் ஆகிவிட்டது. வரலாற்று சிறப்பு மிக்க சட்டமன்றத்தின் மாண்பு மாறி தற்போது கேள்விக்குறியாக மாறிவிட்டது. சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்த 4 மாதம் ஆட்சியில் மக்களுக்கு தேவையான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அவர்கள் புதிய திட்டம் எதையும் கொண்டு வரவில்லை.

தவெக அரசுக்கு ஆதரவு அளித்த கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், அரசுக்கு எதிராக விமர்சனைங்களை பேசி வருகிறார். இதை வைத்து பார்க்கும்போது கூட்டணி தலைவர்கள் தங்களது ஆதரவை திடீரென வாபஸ் பெறலாம். இதனால் த.வெ.க. ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும்.

அடக்கி வாசியுங்கள்

அதிமுகவை பற்றி பேசுவதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு எந்த அருகதையும் இல்லை. அவர் முதலில் திமுகவில் சபரீசனுடன் இருந்தார். அதன்பிறகு விசிகவுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து விலகி என்னை அணுகி அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என கூறினார். அப்போது அவரிடம் நான் தம்பி, இங்கு பதவி விற்பனை செய்வது இல்லை என்றேன்.. இதையடுத்து தவெகவை குத்தகைக்கு எடுத்துள்ளார்..

கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தபோது யார் ஓடினார்கள். அப்போது தவெக அலுவலகம் 15 நாட்கள் பூட்டி கிடந்தது. ஆதவ் அர்ஜூனா வெளி மாநிலத்திற்கு ஓடிவிட்டார். அப்போது வீர வசனம் பேசிய ஆதவ் அர்ஜுனா வெளி மாநிலத்தில் தங்கி இருந்தார். கரூர் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறது. அதன் தீர்ப்பு வரும்போது யார்? எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாது. எனவே அடக்கி வாசியுங்கள்.. என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+