கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு.. தமிழக அரசின் கவனக்குறைவே காரணம்.. எடப்பாடி பழனிசாமி!
சேலம்: கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதற்கு தமிழக அரசின் கவனக்குறைவே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 2011 மக்கள்தொகை அடிப்படையில் திட்ட அறிக்கை அனுப்பியது ஏன் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விதிகளை ஆய்வு செய்து திட்ட அறிக்கையை தயார் செய்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
மதுரை மற்றும் கோவை மாவட்டங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. இதற்கு கோவை மற்றும் மதுரையில் போதுமான மக்கள் தொகை இல்லாதது காரணமாக கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 20 லட்சம் மக்கள்தொகை இருந்தால் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த அனுமதிக்கப்படும் என்று விதிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக கூட்டணி சார்பாக கோவை மற்றும் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன. இந்த நிலையில் சேலம் விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது.
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு எந்த உரிமையும் இல்லை. மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாடு பாலைவனமாகிவிடும், இதனால் மேகதாது அணை கட்ட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. இதனால் ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் பேசி பிரச்சனையை தீர்க்கலாம்.
அதேபோல் மெட்ரோ ரயில் திட்டம் அறிக்கையை தமிழக அரசு கவனக்குறைவாக அனுப்பி இஉர்க்கிறது. மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை சமர்பிக்கும் போது, 2011 மக்கள் தொகையை திமுக குறிப்பிட்டது ஏன்? 2025ஆம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிட்டிருந்தால், ஒப்புதல் கிடைத்திருக்கும். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபின், மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.
கோவை, மதுரை திட்டத்தில் மாநில அரசு விரிவான திட்டம் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மோசமான உள்ளது. ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை கொலை செய்யும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதற்கு காரணமே நிரந்தர டிஜிபியை நியமிக்காதது தான். நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் தமிழக அரசு கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications