என் மனைவி கையை பிடிச்சார் அண்ணன்.. ஆத்திரம் தீரலை.. மண்வெட்டியால் ஓங்கி அடித்தேன்..தம்பி வாக்குமூலம்

பாலியல் தொல்லை தந்த அண்ணன் வெட்டி கொல்லப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

சேலம்: என் பொண்டாட்டி கையை பிடிச்சு இழுத்துட்டார் என் அண்ணன்.. கோயில்ல சத்தியம் பண்ணியும் சில்மிஷம் அடங்கல.. அதான் மண்வெட்டியால் வெட்டி கொன்றுவிட்டேன்" என்று அண்ணனை கொன்ற தம்பி வாக்குமூலம் தந்துள்ளார்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டியை சேர்ந்தவர் ராமர்.. 41 வயது விவசாயி.. சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது மனைவி சாந்தி.. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு சாந்தி, குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் தன்னுடைய சொந்த தோட்டத்தில் ராமர் சடலமாக விழுந்து கிடந்தார்.. உடம்பெல்லாம் அவருக்கு ரத்தகாயம் இருந்தது.. தலையில் பலமான அடிபட்டிருந்தது.. உடம்பு முழுக்க எலக்ட்ரிக் கம்பிகள் சுற்றப்பட்டிருந்தது!

விசாரணை

விசாரணை

தகவலறிந்து கெங்கவல்லி போலீசார் விரைந்து வந்தனர்.. கொடூரமாக ராமரை அடித்தே கொன்றுள்ளனர்.. ஆனால் கவனத்தை திசை திருப்ப உடம்பில் கரண்ட் தாக்கி இறந்ததுபோல, எலக்ட்ரிக் கம்பியை சுற்றியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ராமரின் சித்தப்பா மகன் கலியமூர்த்தி.. அவரது மனைவி கனகாவின் தந்தை உள்ளிட்டோரை பிடித்து தீவிரமாக விசாரித்தனர்.. அப்போதுதான் விஷயம் வெளிப்பட்டது. மணக்காடு பகுதியில்தான் ராமரின் தோட்டம் உள்ளது.. இந்த தோட்டத்துக்கு பக்கத்தில்தான் ராமரின் தம்பி கலியமூர்த்தி - கனகா வீடு உள்ளது..

சில்மிஷம்

சில்மிஷம்

சம்பவத்தன்று கனகா வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, அங்கு சென்ற ராமர், கனகாவின் கையை பிடித்து இழுத்து.. திரும்பவும் சில்மிஷம் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் கலியமூர்த்தி கொதித்து போய்விட்டார்.. தன்னுடைய மாமனாருக்கு தகவல் சொல்லி வரவழைத்து, பிறகு எல்லாரும் ஒன்று சேர்ந்து ராமரை மண்வெட்டியால் வெட்டி கொன்றுள்ளனர். இது சம்பந்தமாக கலியமூர்த்தியிடம் தீவிர விசாரணை நடந்தது.

வாக்குமூலம்

வாக்குமூலம்

அப்போது, இது சம்பந்தமாக கலியமூர்த்தி அளித்துள்ள வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: "எனக்கும் ராமருக்கும் 2 வருஷமாக விவசாய தோட்டத்தில் வரப்பு தகராறு இருக்கிறது.. அதனால எங்களுக்குள்ள பேச்சுவார்த்தை இல்லை... ஆனால், என் மனைவி கிட்ட செக்ஸ் தொல்லை தந்துட்டு இருந்தார். எத்தனை முறை என் மனைவி சொல்லி பார்த்தும், ராமர் திருந்தல.

சத்தியம்

சத்தியம்

ஒருநாள் என்கிட்ட என் மனைவி இதை பத்தி சொன்னதும்,என் சொந்தக்காரர்களை கூப்பிட்டு கண்டித்தேன்.. போன 22-ந்தேதி தோட்டத்தில் என் பொண்டாட்டி கையை பிடிச்சி இழுத்து தொல்லை தந்துள்ளார். அதனால் திரும்பவும் ராமரை கூப்பிட்டு கண்டித்து, இனி கனகாவுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது என்று ராமரிடம் கோயிவில் வைத்து சத்தியம் வாங்கினோம்.

மண்வெட்டி

மண்வெட்டி

எல்லாரும் பேச்சுவார்த்தை முடிந்து கலைந்து சென்றனர்.. ஆனால் எனக்கு மட்டும் ஆத்திரம் தீரவே இல்லை.. நான் மட்டும் கையில் மண்வெட்டியுடன் ராமர் பின்னாடியே போனேன்.. ராமரின் பின்பக்க தலையில் ஓங்கி அடித்ததில் கீழே மயங்கி விழுந்தார்.. உடனே நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்.. திரும்பவும் ராமர் வந்தால், பதிலுக்கு என்னை அடித்து கொன்றுவிடுவார் என்று நினைத்து, திரும்பவும் ராமரை தேடி போனேன்.

மின்கம்பி

மின்கம்பி

கீழே விழுந்தபடியே ராமர் கிடந்தார்.. அப்போதுதான் திரும்பவும் அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து தலையில் அடித்தேன். அப்போதுதான் ராமர் உயிர் போனது. பக்கத்திலேயே மோட்டருக்கு போடும் ஒயர் இருந்தது.. அதை எடுத்து, உடம்பில் சுற்றிவிட்டு, சுவிட்சை போட்டுவிட்டு வந்துவிட்டேன்" என்றார். இதையடுத்து கலியமூர்த்தி, கனகா கனகாவின் தந்தை 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+