சேலம் பிரபல கார் கம்பெனி கேஷியர்... அம்பலமான நதியாவின் கணக்கு.. சிக்கியது எப்படி?
சேலம்: சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியை தலைமையிடமாக கொண்டு திரிவேணி கார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கார் நிறுவனத்தின் சங்ககிரி கிளையில் ரூ.12.50 லட்சம் கையாடல் செய்ததாக பெண் கேஷியர் நதியாவை போலீசார் கைது செய்தனர். சங்ககிரி கிளையின் வரவு, செலவு கணக்குகள் ஆய்வு செய்யப்பட்ட போது தான் நதியாவின் கணக்கு அம்பலமானது.
சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் திரிவேணி கார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவத்தின் ஹெச்ஆர் இளவரசன் என்பவர், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயலை சந்தித்து புகார் கொடுத்தார். அதில் அவர் அளித்த புகார் மனுவில், "திரிவேணி கார் நிறுவனத்தின் சங்ககிரி கிளையில் சங்ககிரி வி.என்.பாளையத்தை சேர்ந்த 33 வயதாகும் நதியா என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு முதல் கேஷியராக வேலை செய்து வந்தார். இவர் தினமும் சங்ககிரி கிளை கார் நிறுவனத்திற்கு சர்வீஸ்க்கு வரக்கூடிய வாகனங்களின் தகவல்களையும், கணக்கு வழக்குகளையும் தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

ஆனால் கேஷியர் நதியா, நிறுவனத்துக்கு சர்வீஸ், உபகரணங்கள் வாங்குவதற்காக வந்த வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல் குறித்து முழுமையாக தெரிவிக்கவில்லை. இதனால் அவர் மீது புகார்கள் எழுந்தது. இதையடுத்து சங்ககிரி கிளையின் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்தோம். இதில் 111 வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்கள் பழுது பார்த்த வகையில் செலுத்திய ரூ.12 லட்சத்து 59 ஆயிரத்து 82-யை கேஷியர் நதியா நிறுவனத்தின் வங்கியில் செலுத்தாமல் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்" என்று கார் நிறுவனம் சார்பில் மனுவில் கூறியிருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சேலம் காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் உத்தரவிட்டார். துணை காவல் கண்காணிப்பாளர் முனியசாமி, இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். இதில் திரிவேணி கார் நிறுவனத்தின் சங்ககிரி கிளையில் கேஷியராக பணியாற்றிய நதியா, 111 வாடிக்கையாளர்கள் செலுத்திய ரூ.12 லட்சத்து 59 ஆயிரத்து 82-யை கையாடல் செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications