சுத்தி சுத்தி நின்னுட்டு! எடப்பாடியையே ஒரு நொடி அதிர வைத்த "மூர்த்தி".. இதான் பவர் காட்டுறது! வீடியோ

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் இன்று அதிகாலை அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்தார். மாவட்ட செயலாளர் இளங்கோவன், எம்பி தம்பிதுரை உள்ளிட்டோருடன் எடப்பாடி ஆலோசனை செய்தார். அதன்பின் அவர் திருவண்ணாமலை சென்றார்.

Recommended Video

    சுத்தி சுத்தி நின்னுட்டு! எடப்பாடியையே ஒரு நொடி அதிர வைத்த மூர்த்தி - வீடியோ

    அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக முயன்று வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று முதல்நாள் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதை பற்றி ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் பலர் ஒற்றை தலைமை வேண்டும் என்று இந்த கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கியமாக முன்னாள் அமைச்சர்கள் பலர் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

    இதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    இரட்டை தலைமை

    இரட்டை தலைமை

    இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும். கட்சியில் ஒற்றை தலைமை கூடாது. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரிமையானது.ஜெயலலிதா வகித்த பதவியில் வேறு யாரும் இருக்கவேண்டாம் என்றே இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது. அதிமுக எந்த ஒரு காரணத்துக்காகவும் உடையக் கூடாது; எடப்பாடியுடன் பேச தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

     எடப்பாடி பழனிச்சாமி

    எடப்பாடி பழனிச்சாமி

    இந்த நிலையில்தான் சேலத்தில் நேற்றும் இன்றும் அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனை முடித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள காட்டாம்பூண்டி கிராம எல்லைக்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று பிற்பகலில் வந்தடைந்தார். அங்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை

    முதன்முறையாக எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று எடப்பாடி பழனிச்சாமி வந்துள்ளார். ஆரணி பகுதியில் நடைபெறும் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் போளூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர் திருவண்ணாமலை வந்தார். கட்சி பிரச்சனைக்கு இடையில் அவர் வந்ததால், அவருக்கான ஆதரவையும் பவரையும் காட்டும் விதமாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது,

    அக்ரி கிருஷ்ணமூர்த்தி

    அக்ரி கிருஷ்ணமூர்த்தி


    விழா நடக்கும் பகுதிக்கு உள்ளே வந்த எடப்பாடியே தனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை. அந்த அளவிற்கு சுற்றி சுற்றி நிர்வாகிகள் நிற்க இதுவரை இல்லாத பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் காரை உள்ளே கொண்டு செல்ல முடியாமல் வெளியே நிறுத்திவிட்டு நடந்து வந்தார். எடப்பாடியே அங்கு இருந்த கூட்டத்தை பார்த்து ஒரு நிமிடம் ஆடிப்போனார். அவரால் உள்ளே இறங்கி நடக்க கூட முடியாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது.

    பெரிய வரவேற்பு

    பெரிய வரவேற்பு


    மகாமக கூட்டம் போல எடப்பாடியை வரவேற்க ஆட்கள் நிரம்பி வழிந்தனர். அவர்களுக்கு உள்ளே முட்டி மோதி 100 மீட்டர்கள் திணறியபடியேதான் எடப்பாடி சென்றார். அதிமுகவில் ஒற்றை தலைமை பதவிக்கு போட்டி நிலவி வருகிறது. இதில் யாருக்கு அதிக தொண்டர்கள் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க ஓபிஎஸ், இபிஎஸ் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில்தான் திருவண்ணாமலையில் எடப்பாடிக்கு மாபெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+