கொங்கு மண்டலத்தால் கோடிகளை குவித்த ரயில்வே.. வெறும் 3 மாதத்தில் அபராதம் மட்டும் இவ்வளவா?
சேலம்: கோவை முதல் சேலம் வரை உள்ள சேலம் கோட்ட ரயில் நிலையங்களில் வெறும் 3 மாதத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள், சரக்கு கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.5½ கோடி அபராதம் வசூலித்துள்ளது ரயில்வே.
ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் சரக்கு கட்டணம் செலுத்தாமல் சரக்குகளை ஏற்றி பயணித்தாலும் ரயில்வே சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் டிக்கெட் இல்லாமல் ரயில் ஏறி வருவோரிடம் அடிக்கடி சோதனை நடத்தி அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் எடுக்காமலும், சரக்கு கட்டணம் செலுத்தாமலும் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.5½ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது: "சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரெயிலில் பயணிப்பவர்கள், முறையற்ற வகையில் பயணிப்பவர்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவர்களைக் கண்டறிந்து, ரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததாக 44 ஆயிரத்து 370 பேர்களிடம் இருந்து ரூ.3 கோடியே 72 லட்சத்து ஆயிரத்து 624 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இந்த கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் ரயில்களில் முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 35 ஆயிரத்து 379 பேர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 93 லட்சத்து 41 ஆயிரத்து 914 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. பதிவு செய்யாமல் சரக்குகளை கொண்டு சென்றதாக 103 பேர்களிடம் இருந்து ரூ.72 ஆயிரத்து 55 அபராதம் வசூலிக்ககப்பட்டது.
மொத்தமாக சேலம் ரெயில்வே கோட்டத்தில் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை ரூ.5 கோடியே 66 லட்சத்து 15 ஆயிரத்து 593 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications