கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவித்தால்.. சேலம் கலெக்டர் டாக்டர்களுக்கு கடும் வார்னிங்
சேலம்: சட்ட விரோத கருக்கலைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் சமூக சூழலில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவதுடன் கர்ப்பிணிகளின் உயிருக்கே ஆபத்துகள் ஏற்படும் நிலை உருவாகிறது. எனவே யாராவது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "சட்ட விரோத கருக்கலைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் சமூக சூழலில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவதுடன் கர்ப்பிணிகளின் உயிருக்கே ஆபத்துகள் ஏற்படும் நிலை உருவாகிறது. எனவே சட்ட விரோதமாக கருக்கலைப்புகள் நடைபெறாமல் இருக்க மருத்துவத்துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கர்ப்பிணிகள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? என்று முன்கூட்டியே அறிவதற்கு முயற்சி செய்வது அல்லது டாக்டரால் தெரிவிக்கப்படுவதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எந்த ஒரு மருத்துவமனையின் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மூலமாக அல்லது வேறு பரிசோதனை மூலமாக கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்தால் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி அல்லது ஸ்கேன் மையத்தின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும்.
இந்த செயலில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய டாக்டரின் மெடிக்கல் கவுன்சில் பதிவு எண் ரத்து செய்யப்படும். மேலும் அவரின் மருத்துவ பணியை நிரந்தரமாக மேற்கொள்ளாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்தால் அதில் ஈடுபட்டவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர். பாலினம் கண்டறிதல் தொடர்பான புகார்களை நலப்பணிகள் இணை இயக்குனரின் 73581-22042 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்" இவ்வாறு சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications