சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சேலம் சாலை.. இது பாமகவிற்கு கிடைத்த வெற்றி.. மத்திய அரசுக்கு தோல்வி.. அன்புமணி வழக்கறிஞர் பரபரப்பு!

சேலம் 8 வழி சாலைக்கு எதிராக வந்து இருக்கும் தீர்ப்பு பாமக கட்சிக்கு கிடைத்த வெற்றி என்று பாமக எம்பி அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு... தர்மசங்கடத்தில் அன்புமணி- வீடியோ

    சென்னை: சேலம் 8 வழி சாலைக்கு எதிராக வந்து இருக்கும் தீர்ப்பு பாமக கட்சிக்கு கிடைத்த வெற்றி என்று பாமக எம்பி அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார்.

    சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.இந்த திட்டத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, பாமக எம்பி அன்புமணி உள்ளிட்டவர்கள் வழக்கு தொடுத்தனர்.

    இந்த வழக்கில்தான் இன்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானிசுப்பராயன் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

    8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது.. அரசாணையும் ரத்து.. ஹைகோர்ட் அதிரடி! 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது.. அரசாணையும் ரத்து.. ஹைகோர்ட் அதிரடி!

    கருத்து என்ன

    கருத்து என்ன

    இந்த தீர்ப்பு குறித்து தற்போது மனுதாரர் பாமக இளைஞரணி தலைவர் எம்.பி அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பேசியுள்ளார். அவர், 8 வழி சாலை திட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. அது தேவையில்லாத திட்டம் என்று பாமக கூறி வந்தது. இதை எதிர்த்துதான் எம்.பி அன்புமணி சார்பாக வழக்கு தொடுத்தோம். இதில்தான் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    அனுமதி இல்லை

    அனுமதி இல்லை

    சரியான முன் அனுமதி இல்லாமல், சுற்றுசூழல் விதிகளை மீறி இந்த சாலையை போட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதன் அடிப்படையில் இந்த திட்டத்தை ரத்து செய்து இருக்கிறார்கள். இந்த தீர்ப்பு ஐந்து மாநில விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி.

    பாமக சேலம்

    பாமக சேலம்

    சேலம் சாலை திட்டத்திற்கு பாமக எதிரானது. பாமகவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. இந்த திட்டத்தை பாமக தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வந்தது. மத்திய அரசு முன் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சாலையை போட முயற்சித்தது அம்பலம் ஆகியுள்ளது.

    எங்களுக்கு வெற்றி

    எங்களுக்கு வெற்றி

    நிச்சயமாக இது பாமகவிற்கு கிடைத்த வெற்றி. விவசாயிகளை சந்தித்து அன்புமணி பேசிவிட்டு, அதன்பின்தான் வழக்கு தொடுத்தார். அரசியல் ரீதியாக பார்த்தாலும், கூட்டணி அமைத்தாலும் எங்களுக்கு இது வெற்றிதான். 8 வழி சாலை திட்டத்தை எதிர்ப்பதில் நாங்கள் கண்டிப்பாக உறுதியாக இருக்கிறோம்.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    மத்திய அரசுதான் இந்த திட்டத்தை கொண்டு வந்தது. மத்திய அரசுதான் ஆலோசனை செய்யாமல், முன் அனுமதி பெறாமல் இந்த திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் மத்திய அரசுதான் இந்த திட்டத்தை தவறாக கொண்டு வந்து இருக்கிறது என்று, அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    It is a moral victory for PMK says Anbumani advocate on Salem 8 way project's MHC verdict.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X