Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏற்காட்டை ஜாலியாக வலம் வந்த சேலம் ஜோடி.. லாட்ஜ் ரூமில் கள்ளக்காதலி கேட்ட கேள்வி.. நிலைகுலைந்த இளைஞர்

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஏற்காடு தனியார் காட்டேஜில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் பேரில் சென்ற போலீசார், சடலமாக கிடந்த பெண்ணை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.. அந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கள்ளக்காதலனையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.. இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொலை செய்யப்பட்டவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 30 வயது சாலா என்ற பெண் ஆவார். அவருடன் காட்டேஜில் தங்கியிருந்தவர் சேலத்தை சேர்ந்த பார்த்திபன்..

Salem Yercaud Lodge

4 ஆண்டு கள்ளக்காதல்

இருவருக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 4 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறு காரணமாக, காட்டேஜில் வாக்குவாதம் முற்றி, பார்த்திபன் சாலாவின் சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். தலைமறைவான பார்த்திபனை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்தது ஏற்காட்டில் பிரபல தனியார் பள்ளி பின்புறம் உள்ள தனியார் காட்டேஜ் ஆகும்... விஷயத்தை கேள்விப்பட்டு போலீசார் அந்த அறைக்குள் சென்றபோது, பெண் அரைநிர்வாண நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.. சேலை தனியாக கிடந்துள்ளது.

என்ன நடந்தது ஏற்காட்டில்

ஜாலியாக ஏற்காட்டிற்கு டூர் போகலாம் என்று சொல்லிதான் சாலாவை அழைத்துள்ளார் பார்த்திபன்.. நேற்று முன்தினம் காலை சாலாவை பைக்கில் அழைத்துக்கொண்டு ஏற்காட்டிற்கு வந்துள்ளார். இருவரும் ஏற்காடை சுற்றி பார்த்துள்ளனர்.. பிறகு உல்லாசமாக இருந்துவிட்டு மாலை கிளம்பிவிடலாம் என்று திட்டமிட்டு, இந்த தனியார் காட்டேஜில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள்...

இதனையடுத்து சாலா, பார்த்திபன் ஆகியோர் நேற்று ஏற்காடுக்கு வந்து அறை எடுத்து தங்கினர்.. உல்லாசமாக இருக்க முடிவு செய்தபோது, சாலா பார்த்திபனிடம் உல்லாசம் மட்டும் அனுபவிக்கிறாயே, பணம் எங்கே? என்று கேட்டுள்ளார். பணம் ஊருக்கு போய் அனுப்பி விடுகிறேன் என்றாராம்.. ஆனால், பணம் தந்தால் மட்டுமே மீண்டும் நாம் உல்லாசமாக இருக்க முடியும் என்று சாலா சொன்னாராம்.. இதனால் வாக்குவாதம் வெடித்துள்ளது...

திருமண செட்டில்மென்ட்

சாலா பணம் கேட்பதிலேயே குறியாக இருந்ததால் வாக்குவாதம் வெடித்துள்ளது.. ஒருவரையொருவர் தாக்கி கொண்டிருக்கிறார்கள்.. இதற்கு பிறகே ஆத்திரம் அதிகமாகி கொலை வரை சென்றுள்ளார் பார்த்திபன்..

தன்னை திருமணம் செய்து கொள்ள பார்த்திபனை ஆரம்பத்தில் இருந்தே சாலா வற்புறுத்தி வந்துள்ளார்.. ஆனால் அதற்கு பார்த்திபன் மறுத்துள்ளார்.. அப்படியானால் பெரிய தொகையை தனக்கு கொடுத்து செட்டில்மென்ட் செய்து வைத்துவிடுமாறும் பிரஷர் தந்து வந்தாராம் சாலா..

கொலை செய்துவிட்டு, ரூம் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, பார்த்திபன் மட்டும் வெளியேறி உள்ளார்.. ஆனால் இதனை காட்டேஜில் யாருமே கவனிக்கவில்லை...

காட்டேஜ் ரூம்

சேலத்துக்கு பைக்கில் வந்து சேர்ந்த பார்த்திபன், தன் நண்பரிடம் இதுபற்றி சொல்லவும், இதைக்கேட்டு அதிர்ச்சி அந்த நண்பர்தான் போலீசுக்கு தகவல் தந்துள்ளார்.. போலீசார் காட்டேஜில் உள்ள சிசிடிவியை ஆராய்ந்தபோதுதான், பார்த்திபன் மட்டும் ரூமை விட்டு வெளியேறுவது பதிவாகி இருந்தது.

ஆனால் கொலை நடந்ததாக சொல்லப்படும் அந்த தனியார் காட்டேஜ், உரிய அனுமதி பெற்று இயங்கவில்லை என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.. இதனால் ஏற்காடு தாசில்தார் செல்வராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் காட்டேஜை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் சொந்த வீட்டை உரிய அனுமதியின்றி காட்டேஜ் போல பயன்படுத்தி வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.. இதையடுத்து காட்டேஜை இழுத்து பூட்டி சீல் வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+