மாநாடு ஏற்பாடுன்னா நேரு மாதிரி வராது.. தினமும் 6 கி.மீ. நடந்து.. புல்லட்டில் போய்.. வெற்றி சீக்ரெட்
சேலம்: சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அதற்காக கடந்த நான்கைந்து மாதங்களாக கடும் உழைப்பை கொட்டியிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.
நாம் ஏற்கனவே ஒரு செய்தியில் குறிப்பிட்டிருந்ததை போல், சென்னை, சேலம், திருச்சி என மாறி மாறி பம்பரமாக சுற்றிச் சுழன்று மாநாட்டை ஒரு வழியாக வெற்றிகரமாக நடத்தி தனக்கு வைக்கப்பட்ட அக்னிப் பரீட்சையில் ஸ்கோர் செய்திருக்கிறார் அமைச்சர் நேரு. மாநாட்டு பணிகளுக்கு மத்தியில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி என மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளிலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

70 வயதை நெருங்கும் நிலையிலும் , சர்க்கரை உள்ளிட்ட உடல் உபாதைகள் உள்ள சூழலிலும் மாத்திரைகளை உட்கொண்டு விட்டு எதைப்பற்றியும் சிந்திக்காமல் தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கை நிறைவேற்றி திமுக தலைமையின் சபாஷை பெற்றுள்ளார். மாநாட்டு திடலில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை எப்போது ஆய்வு செய்யச் சென்றாலும் குறைந்தது 6 கிமீ தூரமாவது நடந்தே சென்று விடுவாராம். அதேபோல் ஒரு நாளைக்கு நடப்பதற்கு கொஞ்சம் அசதியாக இருந்தால் புல்லட்டில் மொத்த மாநாட்டு திடலையும் ஒரு ரவுண்டு அடித்துவிடுவாராம்.
அதேபோல் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமோ அதை உடனுக்குடன் செய்யச் சொல்லி பந்தல் சிவா டீமிடம் வேலை வாங்கியிருக்கிறார். பொதுவாகவே திமுகவில் மாநாடு என்றால் நேரு, நேரு என்றால் மாநாடு என்ற ஒரு பெயர் உண்டு. அதனை மீண்டும் நேற்றைய தினம் நிரூபித்து திமுக வரலாற்றில் தன்னை போல் யாரும் பிரம்மாண்டமாக மாநாடுகளை நடத்தியதில்லை என்ற பெயரை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார் அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சியிலிருந்து சேலத்திற்கும், சேலத்திலிருந்து திருச்சிக்கும் வாரத்திற்கு 3 நாட்களாவது சலிக்காமல் சென்று மாநாட்டு பணிகளை கவனித்துக்கொண்டார். அதேபோல் சாப்பாடு விஷயத்திலும் சொதப்பல் நடக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்த அமைச்சர் நேரு, திருச்சியிலிருந்தே பிரியாணி சமைக்க ஒரு பெரிய டீமை அழைத்துச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications