கொடநாடு வழக்கு பற்றி பேசி.. என்ன பூச்சாண்டி காட்டினாலும் பயப்பட மாட்டேன்.. எடப்பாடி பழனிசாமி பேச்சு!
சேலம்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றி பேசுவதால் பயந்துவிட மாட்டேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொடநாடு வழக்கு தொடர்பாக வேண்டுமென்றே துரோகிகள் திட்டமிட்டு பேசுவதாக குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, எத்தனையோ எட்டப்பர்களும், துரோகிகளும் சேர்ந்து அதிமுகவை வீழ்த்த முயன்றார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து மூத்த தலைவரான செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். குறிப்பாக கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஏன் சிபிஐ விசாரணை கோரவில்லை என்று செங்கோட்டையன் எழுப்பிய கேள்வி விவாதமாகி இருக்கிறது.

செங்கோட்டையனின் கேள்வியை தொடர்ந்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கொடநாடு கொலை தொடர்பாக பேசி இருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் இலக்காக மாறி இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழ்நாடு மக்களுக்கு திமுக அரசு என்ன சாதனைபடைத்தது? அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை ரிப்பம் வெட்டி திறந்து வைப்பதைவிட, ஸ்டாலின் வேறு என்ன சாதனை செய்திருக்கிறார்? இந்த நான்கரை ஆண்டுகளில் துறை வாரியாக லஞ்ச ஊழல் நிறைந்துவிட்டது. லஞ்சம் இல்லாத துறையே கிடையாது.
மக்களை பற்றி சிந்திக்க நேரமில்லை. குடும்பத்தை பற்றி சிந்திக்கவே முதல்வர் தான் தற்போதைய முதல்வர். திமுக ஒரு கட்சியே அல்ல.. அதுவொரு கார்ப்பரேட் கம்பெனி.. தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கு 4 முதல்வர்கள் இருக்கின்றார்கள். ஒன்று ஸ்டாலின்.. 2வது உதயநிதி ஸ்டாலின்.. 3வது ஸ்டாலினின் மனைவி.. 4வது மக்களுக்கே தெரியும்..
அதேபோல் எத்தனையோ எட்டப்பர்கள், துரோகிகள் நம் கூடவே இருந்து நம்மை வீழ்த்த முயன்றார்கள். அத்தனை பேரையும் நாம் வீழ்த்தி, தற்போது அதிமுக தலை நிமிர்ந்து நிற்கிறது. கொடநாடு கொலை, கொள்ளை பற்றி பேசுவதால், பயந்துவிட மாட்டேன். கொடநாடு வழக்கு தொடர்பாக வேண்டுமென்றே துரோகிகள் திட்டமிட்டு பேசுகிறார்கள்.
எங்களுக்கு மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை.. என்ன பூச்சாண்டி காட்டினாலும் எடப்பாடி பழனிசாமி பயப்பட மாட்டான்.. சட்டத்தின் ஆட்சியை நடத்தினோம்.. சட்டப்படி குற்றவாளிகளை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினோம்.. இவர்கள் எல்லாம் அதிமுகவுக்கு விஸ்வாசமாக இருந்தார்களா? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
-
இரட்டை இலை வேண்டாம்.. குக்கர் சின்னமே போதும்.. அமித்ஷாவிடம் சொல்லிவிட்ட டிடிவி தினகரன்! -
என்டிஏவில் அமமுவுக்கு எத்தனை தொகுதிகள்? டெல்லியில் பேசியது என்ன? ஓபனாக சொன்ன டிடிவி தினகரன் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications