கொடநாடு வழக்கு.. எடப்பாடி பழனிச்சாமி ஏன் பதற்றம் அடைகிறார்.. ஆர் எஸ் பாரதி சரமாரி கேள்வி
சேலம்: கொடநாடு வழக்கு சம்பந்தமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடையும் பதற்றம் அவர் குற்றம் செய்தது போல மக்கள் உணர்கின்றனர் என்று சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார் .
தமிழக சட்டமன்றம் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஆரோக்கியமான சட்டமன்றமாக நடந்து வருகிறது எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார் .
சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளராக இருந்து வந்தார். இவர் கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் கடந்த மே மாதம் சந்திரசேகர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

சந்திரசேகர் படம் திறப்பு
சந்திரசேகர் படம் திறப்பு நிகழ்ச்சி இன்று சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் நடந்தது.இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும்,
திமுக அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு, சந்திரசேகரின் உருவப்படத்தை திறந்து வைத்து, பேசினார்.

பதற்றம் ஏன்
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது கொடநாடு வழக்கு சம்பந்தமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடையும் பதற்றம் அவர் குற்றம் செய்தது போல மக்கள் உணர்கின்றனர் என்றும் வழக்கு முடியும் தருவாயில் மீண்டும் விசாரணை தொடங்கலாம் என்று சட்டத்தில் இடம் இருக்கும்போது, அது கூட தெரியாமல் இருப்பது வேதனை. இது போன்ற வழக்கு ஏற்கானவே பல உள்ளது என்றார்.

தமிழக சட்டமன்றம்
இதை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் , 40 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றம் மிக ஆரோக்கியமான மன்றமாக நடைபெற்று வருவதாகவும் சட்டமன்றம் தற்போது தான் சட்டமன்றமாக செயல்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் புது அரசியலை பார்ப்பதாகவும், ஜனநாயகபடி சட்டமன்றம் நடைபெற்று வருவதாகவும் ஆர்.எஸ்.பாரதி பாராட்டு தெரிவித்தார்.

எப்படி ஐ.பி.எஸ் கொடுத்தார்கள்
தமிழகத்தில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்ற அறிவிப்பை தொடர்ந்து திமுக ஆட்சியை கலைக்கபடும் என்று கூறிய பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ஒரு மாநில ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என்று சட்டம் உள்ள நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருப்பது அவர் அரசியலில் அறைவேக்காடு என்பதனை காட்டுகிறது. இவர் எப்படி ஐ.பி.எஸ் கொடுத்தார்கள் என்ற சந்தேகம் எழுகிறது . பாஜக தலைமை எவ்வளவு அரசியல் அறிவு இல்லாதது என்பதை காட்டுகிறது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சாடினார்.

ஆர்எஸ் பாரதி
மேலும் கேஸ் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு , சர்ச்சைகுரிய வீடியோ போன்றவற்றை மறைப்பதற்காக விநாயகர் சிலை தொடர்பான கருத்தை வெளியிட்டு வருகிறார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆர்எஸ் பாரதி, நிச்சயமாக, திசை திருப்பதற்காகவும், தமிழகத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படுத்திடவே இதை கையில் எடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications