முதல்வர் வெளிநாடு செல்வது ஏன் என்று தெரியும்.. வாழ்த்துகள்.. ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்
முதல்வர் பழனிச்சாமி இன்று வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வது ஏன் என்று தெரியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
Recommended Video
சேலம்: முதல்வர் பழனிச்சாமி இன்று வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வது ஏன் என்று தெரியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
முதல்வர் பழனிச்சாமி இன்று காலை வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மொத்தம் 3 நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்கிறார். செப்டம்பர் 10ம் தேதி அவர் பயணம் முடித்து நாடு திரும்புவார்.
இந்த நிலையில் முதல்வர் பழனிச்சாமியின் பயணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் சேலத்தில் பேசினார். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின் என்ன சொன்னார்
ஸ்டாலின் தனது பேச்சில், எடப்பாடி பழனிச்சாமியை சேலம் தாண்டினால் எங்கும் யாருக்கும் தெரியாது. நான் தமிழகம் முழுக்க கிராம சபை கூட்டங்களை நடத்தி இருக்கிறேன்.எந்த கிராமத்திற்கும் என்னால் தனியாக செல்ல முடியும். யாருடனும் என்னால் தனியாக பேச முடியும். முதல்வர் பழனிச்சாமியால் ஏதாவது ஒரு கிராமத்திற்கு தனியாக செல்ல முடியுமா. அவரின் லட்சணம் அதுதான்.

எத்தனை வருடம்
8 வருடமாக அதிமுக ஆட்சியில் இருக்கிறது. இந்த 8 வருடத்தில் அதிமுக மக்களுக்கு ஒரு நல்லது கூட செய்யவில்லை. இன்னும் சில நாட்களில் சட்டசபை தேர்தல் வரப்போகிறது. அப்போது எல்லாம் மாறும். சட்டசபை இடைத்தேர்தல் அதற்கு சரியான சாட்சி. இந்த ஆட்சி முடிவிற்கு வர போகிறது.

வெளிநாடு
எடப்பாடி பழனிசாமி வெளிநாடு போகிறார். அதுவும் 14 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். செய்யட்டும். அவரின் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள். ஆனால் அவர் இப்படி திடீர் என்று வெளிநாடு செல்வது ஏன்? எதற்காக இந்தப் பயணம்? அவர் சுய லாபத்திற்காக இந்த பயணத்தை செய்கிறார்.

குறிக்கோள்
மக்களுக்கு முதலீட்டோடு வந்தால் பாராட்டுவோம். ஆனால் அவரின் குறிக்கோள் அது இல்லை. நீங்கள் வெளிநாடு செல்வது ஏன் என்று தெரியும், முதல்வர் தன்னுடைய தனிப்பட்ட முதலீட்டை பெருக்குவதற்காக வெளிநாடு செல்கிறார். மக்களின் வரிப்பணத்தை வைத்து அவர் வெளிநாடுகளை சுற்றிப்பார்க்க செல்கிறார், என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications