சேலத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உறவினர்.. விஏஓ ஆபீசுக்கு ஆசையோடு போன போது பெரிய ட்விஸ்ட்
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் இளங்கோ என்பவர் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவருடை தந்தை பெயரில் நிலம் உள்ளது. இதற்கு பட்டா பெற இளங்கோ முடிவு செய்தார்.இதற்காக நவப்பட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் பட்டா கேட்டுள்ளார். அவர் பட்டா வழங்க 14 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.இந்த விவாகரத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உறவினரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரை சேர்ந்த 55 வயதாகும் இளங்கோ என்பவர் அந்த பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவருடைய தந்தை சுப்பிரமணிக்கு விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு இளங்கோ பட்டா பெற முடிவு செய்தார். இதையடுத்து இளங்கோ விவசாய நிலத்திற்கு பட்டா கேட்டு, நவப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ் (35) என்பவரிடம் விண்ணப்பித்தார். அதற்கு அவர் பட்டா வழங்க ரூ.14 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத இளங்கோ நேற்று முன்தினம் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூ.14 ஆயிரத்தை இளங்கோவிடம் கொடுத்து அனுப்பி வைத்தனார்கள்..
தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று நவப்பட்டி கிராம நிர்வாக அலுவலக பகுதியில் மறைந்திருந்தனர். அப்போது பெட்ரோல் பங்க் உரிமையாளர் இளங்கோ ரூ.14 ஆயிரம் லஞ்ச பணத்தை கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜிடம் கொடுக்க வந்துள்ளார். பணத்தை அங்கு உள்ள தனது உறவினர் ஜெகதீஷ் குமாரிடம் கொடுக்கும்படி பாக்கியராஜ் கூறியிருந்தாராம்
இதையடுத்து ஜெகதீஷ்குமார் பணத்தை பெற்று கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் ஜெகதீஷ் குமாரை லஞ்ச பணத்துடன் பிடித்து விசாரணை நடத்தினர். பாக்கியராஜ் கூறியதால் பணம் வாங்கியதாக அவர் தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ், அவருடைய உறவினர் ஜெகதீஷ்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 14 ஆயிரம் லஞ்சம் வாஙகிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உறவினர் ஆகியோர் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விவசாய நிலத்திற்கு பட்டா வாங்குவதற்கு லஞ்சம் தர தேவையில்லை... ஆன்லைன் மூலமாகவே எளிமையாக வாங்கலாம். பட்டா விண்ணப்பிக்கும் முன் நிலம் உங்கள் பெயருக்கு மாற்றப்பட்டதற்கான பதிவு செய்யப்பட்ட பத்திர நகல், அந்த நிலத்திற்கு ஏற்கனவே இருந்த பட்டா, சமீபத்திய வில்லங்கச் சான்றிதழ் (நிலம் உங்கள் பெயரில் இருப்பதை உறுதி செய்ய), ஆதார் கார்டு, பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை வேண்டும்.நிலம் வாரிசு அடிப்படையில் கிடைப்பதாக இருந்தால் வாரிசுச் சான்றிதழ் அவசியம் ஆகும்.
தமிழக அரசின் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் நீங்களே விண்ணப்பிக்கலாம். அல்லது அருகிலுள்ள இ-சேவை (e-Sevai) மையத்திற்குச் சென்று அவர்களிடம் மேற்கண்ட ஆவணங்களை தந்து விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்திற்கு மிகக் குறைந்த அளவிலான கட்டணமே வசூலிக்கப்படும் (சுமார் ரூ.60 - ரூ.100 வரை).
நீங்கள் ஒரு நிலத்தின் ஒரு பகுதியை மட்டும் வாங்கியிருந்தால், அந்த நிலத்தை அளந்து புதிய உட்பிரிவு செய்ய வேண்டியதிருக்கும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே 'உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல்' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு அரசு நிர்ணயித்துள்ள அளவீட்டுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பிறகு நில அளவையாளர் வந்து நிலத்தை அளந்து பிரிப்பார்.
பின்னர் நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலர் சரிபார்ப்பார். அவர் தனது பரிந்துரையை வருவாய் ஆய்வாளருக்கு (RI) அனுப்புவார். அதனை வட்டாட்சியர் அங்கீகரிப்பார். பட்டா தயாரானதும் உங்கள் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி வரும், நீங்கள் ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதில் யாருக்கும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் தர தேவையில்லை. லஞ்சம் கேட்டால் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். அவர்கள் உறுதியாக நடவடிக்கை எடுப்பார்கள்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்














Click it and Unblock the Notifications