காவிரியில் பாயும் 1.39 லட்சம் கனஅடி தண்ணீர்.. ஆடி முதல்நாளில் பெருகிய வெள்ளம்.. மக்கள் உற்சாகம்
மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1 லட்சத்து 39 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
சேலம்: மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. விநாடிக்கு 1.39 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் ஓடுவதால் கரையோரங்களில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணை 120 அடியை சனிக்கிழமை எட்டிய நிலையில், நேற்று இரண்டவாது நாளாக 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 1,10,000 கன அடியும், நீர் மின் உற்பத்தி நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி என 1,33,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதை அடுத்து, அணைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த 8ஆம்தேதி முதல் வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது.

நிரம்பி வழியும் மேட்டூர் அணை
நான்காவது நாளாக கர்நாடகா அணைகளில் இருந்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. 10 நாட்களுக்கும் மேலாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

உபரி நீர் வெளியேற்றம்
16ஆம் தேதியன்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 349 கன அடி நீர் வரத்து வந்த நிலையில், 42-வது முறையாக அணையின் முழுகொள்ளளவான 120 அடியை எட்டியது. அணை நிரம்பியதை அடுத்து, நேற்று முன்தினம் மாலை 16 கண் மதகுகள் வழியாக 1 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி என 1,23,000 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

காவிரி ஆற்றங்கரைகளில் வெள்ளம்
இன்றைய தினம் மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,39000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால், போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கொம்பு அணையில் இருந்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் கொள்ளிடம், காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

ஆடி பண்டிகை உற்சாகம்
வழக்கமாக ஆடி 18ஆம் பெருக்கு நாளில்தான் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இந்த ஆண்டு முன்கூட்டியே ஆடி முதல்நாளில் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதை ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். மேட்டூர் அணைக்கட்டு பகுதிக்கு வந்து வெள்ள நீரை பார்வையிட்டதோடு முனியப்பசாமியை வணங்கி சென்றனர்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications