மேட்டூர் அணை குறையுதே.. கபினி, கேஆர்எஸ் அணைகளில் நீர் இருப்பு உயர்ந்தும் அடம் பிடிக்கும் கர்நாடகா
சேலம்: பருவமழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் 78அடியாக சரிந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் நீர் இருப்பு உயர்ந்து தமிழகத்தின் பங்கை தராமல் அடம்பிடிக்கிறது கர்நாடகா. காவிரி எப்போது கால் பதிக்கும் மேட்டூர் அணை எப்போது நிரம்பும் என்று விவசாயிகள் கவலையோடு காத்திருக்கின்றனர்.
டெல்டா விவசாயிகள்: மேட்டூர் அணை நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள் உள்ளன. பல மாவட்ட மக்கள் குடிநீருக்காக மேட்டூர் அணையை நம்பியுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். அதன்படி, கடந்த ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர், பாசன தேவைக்கு ஏற்ப நீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் திறக்கப்பட்டது.

பருவமழை: நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை பெய்யாததாலும், கர்நாடக மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி 79.59 அடியாக இருந்த நீர்மட்டம், பின்னர் பருவமழை காரணமாக அதிகரித்தது. கடந்த ஓர் ஆண்டாக 100 அடிக்கும் குறையாமல் மேட்டூர் அணை நீடித்தது.
குறையும் மேட்டூர் அணை: தற்போது மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட, நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தினமும் 1 அடி வீதம் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று காலையில் அணையின் நீர்மட்டம் 78 அடியாக இருந்தது. இன்று 1 அடி குறைந்து 77அடியாக மேட்டூர் அணை நீர்மட்டம் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 77 அடியாக சரிந்துள்ளதால் பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் மூழ்கி இருந்த கிறிஸ்தவ ஆலயத்தின் கோபுரம் நீருக்கு வெளியே தெரிய தொடங்கி உள்ளது. குறுவை சாகுபடி தீவிரமடைந்துள்ள நிலையில் அணை நீர்மட்டம் குறைவது காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.
நீர் வரத்து குறைவு: மேட்டூர் அணையில் ஜூலை 1ஆம் தேதி 89.51 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 120 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 12,295 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. வெளியேற்றப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக உள்ளதால் தற்போது மேட்டூர் அணை நீர் மட்டம் 77.61 அடியாக மட்டுமே உள்ளது.
கர்நாடகா அணைகள்: அதே நேரத்தில் கர்நாடகாவில் உள்ள அணைகளில் ஜூலை 1ஆம் தேதி 124 அடி கொள்ளளவு கொண்ட கேஆர்எஸ் அணையில் 78 அடி மட்டுமே நீர் இருப்பு இருந்தது. 65 அடி மொத்த கொள்ளளவு கொண்ட கபினி அணையில் மொத்தம் 32 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. ஹேரங்கியில் 90 அடி நீரும் ஹேமாவதியில் 85 அடி தண்ணீரும் ஜூலை 1ஆம் தேதி இருப்பு இருந்தது. பருவமழை பெய்யாத காரணத்தால் தமிழகத்திற்கு தர வேண்டிய பங்கு தண்ணீரை திறக்க முடியாது என்று திட்டவட்டமாக கர்நாடகா அரசு கூறிவிட்டது.
உயரும் கபினி: கேரளா, கர்நாடகாவில் பருவமழை படிப்படியாக தொடங்கி தீவிரமடைந்துள்ளது. ஜூலை 15ஆம் தேதி கேஆர்எஸ் அணையில் 88 அடியாக நீர் இருப்பு உயர்ந்துள்ளது. 65 அடி மொத்த கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 50 அடியாக நீர் இருப்பு உயர்ந்துள்ளது. ஹேரங்கியில் 110 அடியாகவும் ஹேமாவதியில் 88 அடியாகவும் நீர் இருப்பு உயர்ந்துள்ளது. கர்நாடகா அணைகளில் தண்ணீர் இருப்பு உயர்ந்தாலும் ஜூன், ஜூலை மாதத்திற்கான தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடாமல் அடம் பிடிக்கிறது கர்நாடகா. தமிழக அரசிடம் இருந்து முறையான அழுத்தமும் தரப்படவில்லை என்றே தெரிகிறது. இதனால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பொங்கி வருமா காவிரி: கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கேரளா, கர்நாடக நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் காரணமாக, மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 19 அடி உயர்ந்தது. அதேபோன்று, நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது, நீர் வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மழை பெய்தால் மட்டுமே நடப்பாண்டு விவசாயம் தப்பிக்கும். இல்லாவிட்டால் வறட்சியை சந்திக்க வேண்டும் என்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். வருண பகவான் மனது வைப்பாரா? மழை பெய்து காவிரி பொங்கி வருமா?.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications