எடுங்கப்பா.. பையை எடுங்க.. வேட்டியை மடித்துக்கட்டி ஆற்றில் இறங்கிய அமைச்சர் கே.என்.நேரு! என்னவாம்?
சேலம்: தமிழ்நாட்டில் நாட்டின மீன்களைப் பாதுகாத்துப் பெருக்கிடும் திட்டத்தின் கீழ் 1 லட்சம் மீன் குஞ்சுகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று மேட்டூர் காவிரி ஆற்றில் விட்டார்.

தமிழ்நாட்டில் நாட்டின மீன்வளங்களை பாதுகாத்துப் பெருக்கிட ஆறுகளில் மீன் குஞ்சுகளை இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் 40 லட்சம் மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்திட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் இன்று, மேட்டூரில் காவிரி ஆற்றில் வேட்டியை மடித்துக் கட்டி இறங்கி, மீன் குஞ்சுகளை ஆற்றில் விட்டு, இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு.
தமிழ்நாட்டில் ஆறுகளில் இயற்கை வகையான நாட்டின மீன் இனங்கள் உள்ளன. பெரும்பாலான ஆறுகளில் பல்வேறு காரணங்களினால் நாட்டின மீன் இனங்கள் அழிந்து வருகின்றன. இவ்வகையான நாட்டின மீன் இனங்கள் முற்றிலுமாக அழிந்து விடாமல் பாதுகாத்துப் பெருக்கி அவற்றை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சென்றிடும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டின மீன் வகைகள் இயற்கை நீர் நிலைகளில் இருக்கும் போது, தாய் மீன்கள் முட்டையிட்டு, முட்டையிலிருந்து வெளிவரும் நுண் மீன் குஞ்சுகள் பிற வகை மீன்களால் உண்ணப்படுவதால் மீன் குஞ்சுகளின் பிழைப்பு திறன் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதனால் அந்த மீன் இனமே அழிந்துவிடும் சூழல் ஏற்படுகிறது. இதனை தவிர்த்து நாட்டின மீன்களை பாதுகாத்திட நாட்டின மீன்களை அரசு மீன் குஞ்சு உற்பத்தி நிலையங்களில் செயற்கை தூண்டுதல் முறையில் இனப்பெருக்கம் செய்து மீன் குஞ்சுகள் ஆறுகளில் விடப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் சேல்கெண்டை கல்பாசு மற்றும் இந்திய பெருங்கண்டைகளான கட்லா, ரோகு, மிருகால் ஆகிய மீன் குஞ்சுகள் விடப்படுகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான காவிரி, தென்பெண்ணை, பவானி, தாமிரபரணி, வைகை, வெண்ணாறு, வெட்டாறு, கோதையாறு, கொள்ளிடம், அமராவதி ஆகிய ஆறுகளில் தாய்மீன்கள் உயிருடன் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு தூண்டுதல் முறையில் நாட்டின தாய் மீன்களில் இருந்து மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் போது மீன் குஞ்சுகளின் பிழைப்பு திறன் வெகுவாக அதிகரித்திடும்.

இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மூன்று லட்சம் மீன் விரலிகள் என்பது 100 மில்லி மீட்டர் அளவில் வளர்க்கப்பட்டு முதல் கட்டமாக ஒரு லட்சம் மீன் விரலிகள் இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மேட்டூர் காவிரி ஆற்றில் நான்கு ரோடு அனல் மின் நிலைய பாலப் பகுதியில் விடப்பட்டது. விடப்பட்ட மீன் விரலிகளின் மதிப்பு ரூ. 2.70 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications