உங்களை நம்பித் தான் நாங்கள்! நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை! திமுக நிர்வாகிகளுக்கு நேரு தந்த பூஸ்ட்
சேலம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் தொகுதியில் வெற்றிக்கனியை பறித்து முதல்வர் ஸ்டாலின் காலடியில் சமர்பிப்போம் என திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு சூளுரைத்துள்ளார்.
மேலும், உங்களை நம்பித் தான் நாங்கள் என்றும் நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை எனவும் பேசி திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் நேரு பூஸ்ட் கொடுத்திருக்கிறார்.முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற முடிந்ததாகவும் அடுத்த தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் எனவும் ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டே அவரிடம் உறுதி கொடுத்தார்.
இதனால் கீழே அமர்ந்திருந்த தொண்டர்கள் மட்டுமின்றி மேடையில் அமர்ந்திருந்த ஸ்டாலினும் பூரித்துப் போனார். ஏனெனில் அமைச்சர் நேரு ஒரு உறுதி கொடுக்கிறார் என்றால் அதனை தலையை அடமானம் வைத்தாவது செய்து காட்டுவார் என்பதால் தான். மண்டபத்திற்கு வெளியே 5,000 பேர் கத்திருப்பதாகவும் உள்ளே ஒரு மூன்றாயிரம் பேர் அமர்ந்திருப்பதாகவும் முதல்வரிடம் அமைச்சர் நேரு கூறினார்.
இதனிடையே அமைச்சர் நேரு பேசிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த மாலை நாளிதழ் ஒன்றை எடுத்துப் படித்த முதல்வர் ஸ்டாலின், ஏதோ ஒரு பகுதியை மட்டும் சுட்டிக்காட்டி அருகிலிருந்து துரைமுருகனை அழைத்துக் கூறி சிரித்துக் கொண்டிருந்தார்.
அது என்னவாக இருக்கும் எனத் தெரிந்துகொள்வதில் மேடையில் அமர்ந்திருந்த நிர்வாகிகள் ஆர்வம் காட்டினர். நாளையும் சேலத்தில் முதல்வர் முகாமிடுவதால் கட்சியின் முக்கியப் பிரமுகர்களை சந்திப்பார் எனத் தெரிகிறது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ்











Click it and Unblock the Notifications