எதிர்க்கட்சியே இல்லாத ஆட்சி அமைக்கப் போகிறோம்; இது உறுதி... ஸ்டாலினின் நம்பிக்கையை பாத்தீங்களா!

Subscribe to Oneindia Tamil

சேலம்: 200 அல்ல 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். தமிழகத்தில் எதிர்கட்சி இல்லாத ஆட்சியை திமுக அமைக்கும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர் கொடுப்போம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததாக கூறும் முதல்வர், ஜெயலலிதா மரணத்திற்கான மர்மத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதிமுக தோல்வியை தழுவும்

அதிமுக தோல்வியை தழுவும்

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:- அதிமுக தேர்தல் அறிக்கையில் வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர் கொடுப்போம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியையும், அதிமுக கூட்டணி மிக பெரிய தோல்வியை தழுவும் என வெளிவந்துள்ளது.

எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்

எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்

ஆகவே 200 அல்ல 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். தமிழகத்தில் எதிர்கட்சி இல்லாத ஆட்சியை திமுக அமைக்கும். மக்கள் தரும் வரிப்பணத்தில் மக்கள் நல திட்ட பணிகளை மேற்கொள்ளாமல், சுய விளம்பரத்திற்காக செலவு செய்கிறார்கள். இதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும். என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

வேட்பாளர் பெயரை மறந்த ஸ்டாலின்

வேட்பாளர் பெயரை மறந்த ஸ்டாலின்

மு.க. ஸ்டாலின் பேசும்போது வீரபாண்டி தொகுதி வேட்பாளரின் பெயரை மறந்ததால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் விசாரணை தொடர்பாக மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நானும், எனது தந்தையும் காரணம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை

ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் எனக்கூறும் முதல்வர் விசாரணை ஆணையம் அமைக்கட்டும். அந்த விசாரணை ஆணையத்தில் ஆஜராக நான் தயாராக இருக்கிறேன். பொய்களை நிறுத்தி விட்டு ஜெயலலிதா மரணத்திற்கு காரணமான உண்மையை முதல்வர் வெளியிட வேண்டும். ஆறுமுகசாமி ஆணையம் அமைத்து 4 ஆண்டுகளாகிறது. இதுவரை விசாரணை அறிக்கை வெளியிடப்படவில்லை. ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததாக கூறும் முதல்வர், ஜெயலலிதா மரணத்திற்கான மர்மத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+