முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்.. பரபர பிரச்சாரத்திற்கு இடையே நடந்த மீட்டிங்! பின்னணி என்ன?
சேலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திடீரென இன்று சந்தித்துள்ளார். சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
லோக்சபா தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் உக்கிரமடைந்துள்ளது. இதற்கிடையே, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் மட்டும் ஒதுக்கப்பட்டது. கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தை நேற்று ஈரோட்டில் இருந்து தொடங்கினார் மநீம தலைவர் கமல்ஹாசன். ஈரோட்டில் நேற்று திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார் கமல். இதையடுத்து சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி இருந்தார் கமல்ஹாசன்.
இந்நிலையில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் சேலத்தில் தங்கியுள்ளார். நேற்று தருமபுரியில் பிரச்சாரம் செய்த முதல்வர் ஸ்டாலின், சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார்.
காங்கிரஸ் மீது கோபம்.. “மதிக்கவே இல்ல”.. கமல் பிரச்சாரம் செய்யும் தொகுதிகள் லிஸ்ட்டை பாருங்க! ஆஹா!
தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் முதலமைச்சர் ஸ்டாலின் தங்கியுள்ள அதே ஹோட்டலில் தான் தங்கி இருந்தார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் இன்று காலை சந்தித்து பேசினார்.

நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், தேர்தல் பிரச்சார நிலவரம் பற்றி இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு அதிகளவில் உள்ளதாக ஸ்டாலினிடம் கமல்ஹாசன் கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் கமல்ஹாசன் விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சியிலும், 3ஆம் தேதி சிதம்பரத்திலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார் கமல்ஹாசன். வரும் ஏப்ரல் 16ஆம் தேதி வரை திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications