முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக கார்ட்டூன்.. நாம் தமிழர் நிர்வாகி கைது
சேலம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக கார்ட்டூன் வெளியிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வீரபாண்டி குமரேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். கருணாநிதி குறித்து அவதூறாக கார்ட்டூன் வெளியிட்டது குறித்து தட்டி கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி சமூக வலைதளங்களில் குமரேசன் என்பவர் அவதூறாக கார்டூன் பதிவிட்டதாக கூறப்படுகிறது இதை பார்த்த திமுகவினர் அதிர்ச்சி அடைந்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது முருகேசன் என்பவரை அவர் கொன்றுவிடுவதாக மிரட்டினாராம்.

இதையடுத்து கருங்கல்பட்டியை சேர்ந்த 56-வது வார்டு தி.மு.க. செயலாளர் முருகேசன் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அவர் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த குமரேசன் (49) என்பதும் இவர் இவர் நாம் தமிழர் கட்சியில் தெற்கு தொகுதி முன்னாள் துணை தலைவராக இருந்து உள்ளார் என்பதும் தெரிய வந்தது. குமரேசன் சேலம் டவுண் பகுதியில் வாகன உதிரி பாகம் விற்பனை கடை வைத்திருக்கிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பதிவிட்டது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க குமரேசனை தாதகாப்பட்டி காவலர்கள் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு நாம் தமிழர் கட்சி நிர்வாகி குமரேசனை கைது செய்தனர். இந்த சம்பவம் நாம் தமிழர் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications