மதுரை, சேலம்.. சாலையோரம் கூவி கூவி விற்கப்படும் மானம்! இது புதுசா இருக்குது

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாயைத் தாண்டி வந்தால், இரவு 8:30 மணிக்கு மேல் ஒரு வித்தியாசமான காட்சி கண்முன் நிற்கிறது. சாலையோரம், பளபளக்கும் சேலைகளும், மாடர்ன் ட்ரஸ்களும், கண்ணைக் கவரும் மேக்அப்பும், கைகளில் மொபைல் போன்களுமாக திருநங்கைகளும் இளம் பெண்களும் வரிசையாக நின்று கொண்டிருக்கிறார்கள். கண்ணாடியை இறக்கி "ஹாய் டார்லிங்... வா வா..." என்று அழைக்கும் குரல்களும், சிரிப்பும், சைகையும் கலந்து அது ஒரு "நைட் மார்க்கெட்" போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன.

சென்னை சாலையிலிருந்து கப்பலூர் வரும் மதுரை பைபாசும் இதற்கு விதி விலக்கு அல்ல. அங்கும் அதே மாதிரி காட்சிகள்.

travel Madurai Salem
Photo Credit:

முன்பெல்லாம் தமிழ்நாட்டு நெடுஞ்சாலைகளில் இப்படியொரு காட்சி அரிதில் அரிது. ஆனால் இப்போது இது தினசரி நிகழ்வாக மாறிவிட்டது. லாரி டிரைவர்கள், தனியார் வாகன ஓட்டிகள், இரவு நேர பயணிகள் என யாராக இருந்தாலும் "கஸ்டமர்" என்ற ஒரே பெயரில் வரவேற்கப்படுகிறார்கள்.

"முன்னெல்லாம் இங்கே திருநங்கைகள் மட்டும்தான் நின்னாங்க, அதுவும் அவ்வப்போது. இப்போ புதுப் பெண்களும் வந்துட்டாங்க. இரவு 8 மணிக்கே ஆரம்பிச்சுடுவாங்க, அதிகாலை வரைக்கும் நிக்கிறாங்க" என்கிறார் அடிக்கடி இந்தப் பைபாஸ் வழியாக வரும் ஒரு லாரி டிரைவர்.

சாலையோரம் நிற்கும் இவர்களை விரட்டுவதோ, கைது செய்வதோ போலீசாரால் நடப்பதே இல்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகிறது. "போலீஸ் வண்டி வந்தாலும் ஒதுங்கிட்டு நிப்பாங்க, போனதும் மறுபடியும் வந்துடுவாங்க" என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். ஆனால் ஊருக்கே தெரியும் தகவல்கள் போலீசாருக்கு எப்படி தெரியாமல் இருக்கும் என்ற கேள்வியை மக்கள் எழுப்புகிறார்கள். ஹைவே பேட்ரோல் வாகனங்களை இப்போதெல்லாம் அதிகம் பார்க்க முடிவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

குடும்பத்தோடு வாகனங்களில் பயணிப்போர் தங்கள் குழந்தைகளுக்கு இதை எப்படி விளக்க முடியும்? உங்களுக்கு இதுபோன்ற காட்சிகள் கண்களில் பட்டிருந்தால், எங்கே என்ற கருத்துகளை கமெண்டில் தெரிவியுங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+