தமிழகத்தில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தும் திட்டம் இல்லை- முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
மேட்டூர்: தமிழகத்தில் லாக்டவுனை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் எதுவுமே இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு இன்று நீர் திறந்துவிடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் நீரை இன்று திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
அனைவரும் தவறாமல் முகக் கவசம் அணிய வேண்டும்; வெளியில் சென்றுவிட்டு திரும்பினால் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். குறிப்பாக சென்னையில் முக கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும்.
தமிழகத்தில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தும் திட்டம் இல்லை. தமிழகத்தில் லாக்டவுன் மீண்டும் கடுமையாக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானவை. என்னுடைய பெயரில் அப்படி செய்திகளை வெளியிட்டவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் மக்கள் மிக நெருக்கமாக இருப்பதால்தான் கொரோனா தொற்று அதிகமாக ஏற்படுகிறது. பொதுமக்கள் தேவையே இல்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேன்டும்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications